Kadhai Alla Nijam
Friday, July 24, 2020
Monday, July 13, 2020
Sunday, June 21, 2020
Friday, June 19, 2020
Thursday, December 14, 2017
Friday, November 15, 2013
பெயர் என்பது ஒருவருக்கு மிக முக்கிய அடையாளம்,அழைப்பதற்க்கா இருக்க கூடிய பெயர்கள் நாண்கு ,ஆறு எழுத்துக்களில் இருந்தால் நன்றாக இருக்கும் குறிப்பாக பெயர்கள் அவரவர் தாய்மொழியில் இருப்பது தான் சிறந்தது.உதாரணத்திற்க்கு என் பெயர் ஜோதி நரசிம்மன்.இதில் என்னை அதிகம் பேர் அழைப்பது ஜோதி என்றுதான். நரசிம்மனுடன் சேர்ந்து நான் பயனிப்பது ஆவணங்களில் மட்டும் தான்.சரி நீங்கள் வைத்திருக்கும் பெயர் தமிழ் இல்லையே? என கேட்கலாம் ஆமாம் தமிழ் இல்லை.அது என் பெற்றோர் வைத்தபெயர் .அப்படியானல் தற்போது நீங்கள் தமிழில் பெயரை மாற்றியிருக்கலாமே எனவும் கேட்கலாம்.மாற்றியிருக்கலாம்,ஏன் மாற்றவில்லையென்றால் இப்படி ஒரு சமஸ்கிருத பெயரை தாங்கி நான் வாழ்வது இனியாரும் சமஸ்கிருதத்தில் பெயர் வைக்காதீர்கள்,அதுவும் இவ்வளவு நீளமான பெயரை வைக்காதீர்கள் என்பதற்காகத்தான்.அப்படியானால் பெயர்வைப்பதில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பது அனைவரின் கேள்வியாக இருக்கும்.நான் என் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைத்துள்ளேன் எனது மகள் பெயர் "தமிழினி" எனது மகனின் பெயர் "எழிலன்"இது போன்று அழைப்பதற்க்கு எளிமையான குறைந்த எழுத்து எண்ணிக்கையில் பெயர் வைப்பதே சிறந்தது.
மீண்டும் சந்திப்போம் தோழமையுடன் ஜோதி நரசிம்மன்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் முகநூலில் அதிக தவல்களை பகிர்வது சிரமமாக உள்ளது எனவே பெயரில் என்ன இருக்கு படிக்க வேண்டியவர்கள் எனது thamizhini76.blogspot.com என்ற இணையத்தில் படிக்கலாம் நன்றி
Monday, November 11, 2013
குறிப்பாக பெயர் வைப்பது என்பது தற்போது ஒரு பெரும் வேலையாகிவிட்டது பலருக்கு.பெயர் என்பது ஒருவருக்கான அடையாளங்களில் மிக முக்கியமானது.எங்கள் வீட்டின் அருகே நரிக்குரவர்கள் குடியிருப்பு இருக்கிறது.அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் வித்தியாசப்பட்டது.அவர்களின் பெயர்கள் வித்தியாசமானதாகவும் இருக்கும்.ஒருவருக்கு பெயர் "லைட்டர்" லைட்டர் என்றால் என்ன? என்று கேட்டால் அவர் லைட் வெளிச்சத்தில் பிறந்தார் அதனால் லைட்டர் என்று வைத்தோம் என்கிறார்கள்.ஒருவருக்கு பெயர் "கிங்காங்"இது ஏதாவது குலதெய்வத்தின் பெயரா என்றால் இல்லை அந்த வழியே சென்றவர்கள் இவர் பிறந்திருக்கும் போது பேசிக்கொண்ட ஒரு வாத்தையாகுமாம்.மற்றொருவர் பெயர் "மாசி"இன்னொருவர் "தங்கவேல்"இது சினிமாவில் கேள்விப்பட்ட பெயராம் இப்படி அவர்களொரு அடையாளத்திற்க்காக பெயர்வைத்துக்கொள்ளுகிறார்கள் .இது சரியோ,தவறோ என்பது விவாதிக்க வேண்டியதுதான்.ஆனாலும் அவர்களை பொறுத்தவரை அழைப்பதற்க்குத்தான் பெயர் அது எப்படியிருந்தால் என்ன என்பது தான். அவர்களுக்கு சமுதாயத்திலே இந்த பெயர் எப்படி பார்க்கப்படுகிறது இதனால் இந்த பெயரை தாங்கி நிற்கிறவனக்கு என்ன விளைவு ஏற்படும் என்ற கவலையெல்லாம் இல்லை காரணம் அவர்கள் மனிதர்களாக இருந்தாலும் தற்போது இருக்கிற சூழலை பெரிதும் அவர்கள் உணரவே இல்லை. இருந்தாலும் தற்போது அவர்களின் அடுத்த தலைமுறை பள்ளிக்கூடங்களை நோக்கி செல்லத்துவங்கிவிட்டன.இப்போது பெயர்வைப்பதில் அவர்களும் கவனம் செலுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அப்படி பெயரில் என்னதான் இருக்கிறது!பெயர் ஒருவனுக்கு ரொம்ப முக்கியமா?தொடர்ந்து பார்ப்போம்--------------ஜோதி நரசிம்மன்
Sunday, May 12, 2013
சிறுவர் (பையன்கள்) கைத்திறன்
கோலி விளையாட்டு
1. அச்சுப்பூட்டு
2. கிட்டிப்புள்
3. கோலி
4. குச்சி விளையாட்டு
(எல்லா வயதினரும், ஆண்
பெண் இருபாலாரும்)
5. குதிரைக் கல்லு
6. குதிரைச் சில்லி
7. சச்சைக்காய் சில்லி
8. சீச்சாங்கல்
9. தெல்லு (தெல்லுருட்டான்)
10. தெல்லு (தெல்லு எறிதல்)
11. பட்டம்
12. பந்து, பேய்ப்பந்து
13. பம்பரம்
14. மல்லு
15. வில்லுக்குச்சி
கால் திறன்
1. ஆனமானத் திரி
2. கரணப்பந்து
3. குதிரைக்குக் காணம் காட்டல்
4. கொக்கு விளையாட்டு
5. கோழிக்கால்
6. தை தக்கா தை
7. நடைவண்டி ஓட்டம்
8. நொண்டி
9. பச்சைக் குதிரை
10. பொய்க்கால் நடை, கொட்டாங்குச்சி நடை
11. மந்தி ஓட்டம்
12. மாட்டுக்கால் தாண்டல்
13. மூக்குப்பிடி (துரத்திப் பிடி)
அணி விளையாட்டு
1. ஓடுசிக்கு
2. சூ விளையாட்டு
3. நாடு பிரித்து
4. பந்து, பிள்ளையார் பந்து
5. பூச்சொல்லி
6. மதிலொட்டி
7. மந்திக் குஞ்சு
8. வண்டி உருட்டல்
குழு விளையாட்டு
1. அணில் பிள்ளை
2. ஆடும் ஓநாயும்
3. உயிர் கொடுத்து
4. கல்லுக்குச்சி
5. காக்கா கம்பு
6. காக்கா குஞ்சு
7. குச்சிக்கல்
8. குரங்கு விளையாட்டு
9. கோட்டான் கோட்டான்
10. கோழிக்குஞ்சு
11. தவளை விளையாட்டு
12. நாலுமூலைக் கல்
13. மரக்குரங்கு
14. வண்ணான் தாழி
15. வண்ணான் பொதி
நீர் விளையாட்டு
1. காயா பழமா
2. நீரில் தொடல்
3. நீரில் விழுதல்
கண்டுபிடி
1. உருண்டை திரண்டை
2. சீப்பு விற்கிறது
உல்லாசம்
1. ஊதல்
2. கால் தூக்கிற கணக்கப்பிள்ளை
3. சீத்தடி குஞ்சு
4. தோட்டம் (விளையாட்டு)
5. பஞ்சு வெட்டும் கம்போடா
சிறுமியர்
உடல்-திறன்
1. சில்லு (சில்லி)
கைத்திறன்
1. கல் பிடித்தல்
2. சுண்டு முத்து
3. தட்டாங்கல்
உல்லாசம்
1. இதென்ன மூட்டை
2. கிளி செத்துப்போச்சு
3. ஊதாமணி
4. என் உலக்கை குத்து குத்து
5. ஒருபத்தி இருபத்தி
6. ஒளிதல்
7. குச்சு குச்சு ரங்கம்மா
8. குறிஞ்சி வஞ்சி
9. கொடுக்கு
10. சிறுவீடு விளையாட்டு
11. சோத்துப்பானை (சோற்றுப்பானை)
12. ராட்டு பூட்டு
13. தவிட்டுக் குஞ்சு
14. பிஸ்ஸாலே பற
15. பூசனிக்காய் விளையாட்டு
16. பூப்பறி விளையாட்டு
17. பூப்பறிக்க வருகிறோம்
18. பூப்பூ புளியம்பூ
19. மச்சிலே யாரு
20. மத்தாடு
21. மோரு விளையாட்டு
22. வேடிக்கை விளையாட்டு
கலை விளையாட்டு
1. கும்மி
இருபால் இளைஞர்
உடல் திறன்
1. ஊதுமுத்து
2. உயிர் எழுப்பு
3. ஐந்து பந்து
4. எலியும் பூனையும்
5. கல் எடுத்தல்
6. கல்லா மண்ணா
7. கல்லுக் கொடுத்தான் கல்லே வா
8. குஞ்சு விளையாட்டு
9. குத்து விளையாட்டு
10. துரத்திப் பிடி
11. தூண் விளையாட்டு
12. தொடு விளையாட்டு
13. நாலு மூலை விளையாட்டு
14. நிலாப்பூச்சி
15. நெல்லிக்காய் (பாடித் தொடுதல்)
16. பாரிக்கோடு
17. புலியும் ஆடும்
18. மரங்கொத்தி
19. மல்லர் கம்பம்
20. மலையிலே தீப்பிடிக்குது
21. மாங்கொழுக்கட்டை
உல்லாசம்
1. ஊஞ்சல்
2. ஈசல் பிடித்தல்
3. உப்பு விற்றல்
4. ஒருகுடம் தண்ணி ஊத்தி – விளையாட்டு
5. கரகர வண்டி
6. கள்ளன் போலீஸ்
7. காற்றாடி
8. கிய்யா கிய்யா குருவி
9. கிழவி விளையாட்டு
10. கிறுகிறு மாம்பழம்
11. குலையா குலையா முந்திரிக்காய்
12. சங்கிலி விளையாட்டு
13. தட்டான் பிடித்தல்
14. தட்டை
15. நடிப்பு விளையாட்டு (தண்ணீர் சேந்துகிறது)
16. பந்து, எறிபந்து
17. பந்து, பிடிபந்து
18. பன்னீர்க்குளம் (விளையாட்டு)
19. பூக்குதிரை
20. வண்டி உருட்டல்
உத்தித் திறன்
1. உப்பு வைத்தல்
2. எண் விளையாட்டு
3. ஓடுகுஞ்சு
4. கண்ணாம்மூச்சி
5. கிச்சுக் கிச்சுத் தம்பலம்
6. கொப்பரை கொப்பரை
7. தந்தி போவுது தபால் போவுது
8. நிலாக் குப்பல்
9. பாக்குவெட்டியைக் காணோமே
10. மாது மாது
ஊழ்த்திறன் (திருவுளம்)
1. ஒற்றையா இரட்டையா
2. கண்கட்டி விளையாட்டு
3. மோதிரம் வைத்தல்
4. ராசா மந்திரி
பட்டவர் தெரிவு
1. ஓ… சிய்யான்
2. பருப்பு சட்டி (விளையாட்டு)
3. புகையிலைக் கட்டை உருட்டுதல்
காளையர்
1. அடிமுறை
2. இளவட்டக்கல்
3. கிளித்தட்டு
4. சடுகுடு (கபடி)
5. சல்லிக்கட்டு (பாய்ச்சல் காளை)
6. சிலம்பம்
கன்னியர்
1. அம்மானை
(ஒருவர் ஆடுவது சங்ககாலப்
பந்து விளையாட்டு. மூவர், ஐவர் எனக் கூடிப்
பாட்டுப்
பாடிக்கொண்டு அடுவது அம்மானை விளையாட்டு)
முதியோர்
1. ஆடுபுலி
2. ஓட்டம்
3. கட்ட விளையாட்டு
4. கைச்சில்லி
5.சூது தாயம்
6. தாயம்
7. திரிகுத்து
8. துரும்பு
9. நட்சத்திர விளையாட்டு
10. பரமபதம் (விளையாட்டு)
11. பல்லாங்குழி
12. முக்குழியாட்டம்
பாப்பா விளையாட்டு
1. அந்தக் கழுதை இந்தக் கழுதை
2. அய்யன் கொம்பு
3. அட்டலங்காய் புட்டலங்காய்
4. அத்தளி புத்தளி
5. உப்பு மூட்டை
6. கிள்ளாப் பறண்டடி
7. தட்டலங்காய் புட்டலங்காய்
8. தென்னைமரம் விளையாட்டு
(ஐலேலம் ஐலகப்பல்
விளையாட்டு)
9. நடைவண்டி
10. நான் வளர்த்த நாய்க்குட்டி
11. பருப்பு கடை (விளையாட்டு)
எல்லாரும் விளையாடும் விளையாட்டு..
கலை விளையாட்டு
1. கரகம்
2. கழியல்
3. கழைக்கூத்து
4. காவடி
5. கோக்கழிக் கட்டை
6. வர்மம்
தெய்வ ஆடல்கள்
மக்கள் ஆடல்கள்
விழா விளையாட்டு
1. உரிமரம்
2. உரியடி
3. கார்த்திகை விளக்கு
4. கார்த்திகைச் சுளுந்து
5. தைப்பாவை
6. பரணி பரணி
7. பாரி வேட்டை
8. பானை உடைத்தல்
9. புலியாட்டம்
10. பொம்மைச்சீட்டு
11. மஞ்சள் நீர் விளையாட்டு
12. மாட்டுப் பந்தயம்
13. மூணுகட்டை
14. மோடி விளையாட்டு
சொல் விளையாட்டு
1. கேலி
2. பூக்குதிரை
3. பூச்சொல்லி
4. மொழி விளையாட்டு
5. ரானா மூனா தண்டட்டி
Friday, November 2, 2012
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் – 5ம் ஆண்டு நினைவுநா
பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் – 5ம் ஆண்டு நினைவுநாள்
ஆரம்ப காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியாக இருந்து படிப்படியாக வளர்ந்து போர்க்களத்தில் தளபதியாகவும் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் அவரின் இணைப்பாளராகவும் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் செயற்ப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் 1993ம் ஆண்டு, பூநகரி இராணுவ முகாம் மீது முன்னெடுக்கப்பட்ட „தவளைப் பாய்ச்சல்' நடவடிக்கையில் பங்குபற்றி காலில் காயம் அடைந்ததை தொடர்ந்து பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக 1993ம் ஆண்டு பொறுப்பேற்று 02.11.2007ம் ஆண்டு வீரமரணம் அடையும் வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்நிலைப் பொறுப்பாளர்களில் ஒருவராக செயற்ப்பட்டார்.
1994 முதல் 1995ம் ஆண்டு வரை சந்திரிக்கா அரசுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிக்குத் தலமையேற்றுச் செயற்பட்டார். 2002ம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலமையின் கீழ் இணைந்து செயற்ப்பட்டு, அன்ரன் பாலசிங்கம் அவர்களின் சாவிற்குப் பிறகு பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களே பேச்சு வார்த்தை அணிக்குத் தலமையேற்றுச் செயற்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்த சேவையை மதிப்பளித்து, தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 2007ம் ஆண்டு „பிரிகேடியர் தமிழ்ச்செல்வன்' என கௌரவிக்கப்பட்டார். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார் „ நான் அவனை எனது தம்பியாக நினைத்து வளர்த்தேன், தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுகந்திரமாக, கொளரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்று சதா சிந்தித்தான். தான் நேசித்த அந்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்.'
அன்பான தமிழ் உறவுகளே, பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் இலட்சியத்தை மீட்டெடுக்க அனைத்து தமிழர்களும் ஓரணியில் இணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
Thursday, September 20, 2012
விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராடிய வைகோ,
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தமத கல்வி நிலைய துவக்க விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே டில்லி வந்துள்ளார். அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மற்றும் அவரது கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் மத்தியப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் சென்றனர்.
இவர்கள் மகாராஷ்டிரம்- மத்தியப் பிரதேச எல்லையில் உள்ள பந்துர்னா என்ற இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து அதே இடத்தில் மாலை 4.30 மணி முதல் நடு ரோட்டில் அமர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவித சம்பாவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு குவிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான போலீசாரும் அவர்களுக்கு எதிரிலேயே அமர்ந்துள்ளனர்.
விடிய விடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் போராட்டம் நடைபெற்றது. வைகோ உடன் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அனைவருக்கும் இரவு உணவு அங்கேயே சமைத்து பரிமாறப்பட்டது.
ராஜபக்சேவின் கொடுமைகளை பற்றி இந்தியில் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட துண்டுபிரசுரத்தை அங்குள்ள கிராம மக்களுக்கு தொண்டர்கள் விநியோகம் செய்தனர். இதனையடுத்து நள்ளிரவில் கொட்டும் பனியில் நடுரோட்டில் தொண்டர்களுடன் வைகோ படுத்து உறங்கினார்.
காலையில் உள்ளூர் மக்கள் உணவும், நீரும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். கொளுத்தும் வெளியில் பேராட்டம் தொடர்ந்து வரும் நிலையில்
கூட்டத்தில் பேசிய வைகோ, ராஜபக்சேவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மட்டுமல்லாது பாஜகவும் ஆதரவு தருவதாக குற்றம் சாட்டினார்.
மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று தம்மிடம் கூறிவிட்டு தற்போது எல்லையிலேயே தடுத்து நிறுத்திவிட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே இந்தியாவிற்கு வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதற்காக ஒரு உயிர்வேறு போயிருக்கிறது. தங்களை தடுத்து நிறுத்தினாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று கூறினார். இதற்காக தாம் கைதாகவும் தயார் என்றும் வைகோ கூறினார்
Tuesday, July 3, 2012
Monday, April 23, 2012
இருக்கிறானா? இல்லையா ?
Wednesday, March 21, 2012
கூடங்குளம்அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறதுகைது
இங்ஙனம்
(பழ. நெடுமாறன்)ஒருங்கிணைப்பாளர்
Wednesday, February 8, 2012
புதுவை இரத்தின துரை -வே.பாலகுமாரன் இன்னும் மறையவில்லை
புதுவை இரத்தின துரை -வே.பாலகுமாரன்
இன்னும் மறையவில்லை
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த – சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார்.
தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ்- விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பாலகுமாரன், யோகி, லோறன்ஸ் திலகர், பாப்பா, புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட சுமார் 50 விடுதலைப் புலிகள் உடற்சோதனைகளின் பின்னர் பேருந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதைக் கண்டதாக நேரில் கண்டவர்கள் சாட்சியம் அளித்திருந்தனர்.
இவர்களின் நிலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எந்தத் தகவலையும் வழங்க மறுத்து வருகிறது.
இந்தநிலையிலேயே பாலகுமாரன், யோகி ஆகியோர் போர் முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர ஒரு ஆண்டுக்கு முன்னர் கூறியிருந்தார்.
எனினும் பாலகுமாரன், யோகி ஆகியோர் கடுமையான செயல்முறைகளின் மூலம் விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
எனினும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா என்பது பற்றியோ, அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியோ தகவல் வெளியிட அந்த வட்டாரங்கள் மறுத்துள்ளன.
பாலகுமாரன் பற்றி `டெக்கன் குரோனிக்கல்` செய்தியாளர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் தவிர்த்திருந்த நிலையில் தான் `சிறிலங்கா` கார்டியன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கவிஞர் புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டிய நிலையிலும், லோறன்ஸ் திலகர் மனக்குழப்பத்தினால் தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலும் இருப்பதாகவும் `சிறிலங்கா கார்டியன்` தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி-
தாய்தமிழ் இணையம்.
Thursday, February 2, 2012
சு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்
அணு சக்தியும் அணு ஆயுதங்களும் வேறு வேறு அல்ல இளமைப் பருவமே போராட்டக் களத்தில்தான் அமைந்தது. 1988 லிருந்து துவங்கப்பட்ட கூடங்குளம் இரட்டை அணுவுலைகளுக்கெதிரான போராட்டம் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அணுசக்தித் துறையின் போராட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்கள், மக்களை சாதி ரீதியில் பிரித்து போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் அரசாங்க உத்திகள் இவற்றையெல்லாம் தாண்டி மக்கள் இப்போராட்டத்தை தீவிரப் படுத்தியுள்ளனர். அணுக்கொள்கையில் அரசாங்கத்தின் பிடிவாதமும், இந்திய பிரதமர் ரஷ்யா சென்று அணு வுலைகள் தொடர்பாக செய்த அறிவிப்பும் மேலும் இப்போராட்டத்தை வலுப்படுத்தியிருக்கிறது. இந்திய அளவில் பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ள இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து வருபவர் சுப. உதயகுமார். தொடர்ந்து அணுசக்தியும், அணு ஆயுதங்களுக்கும் எதிராக குரல் கொடுத்துவரும் சுப. உதயகுமார் காந்திய வழியில் போராடி வருபவர். காந்தியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர். நாகர்கோவிலுள்ள இசங்கன்விளை என்னும் ஊரைச் சார்ந்த உதயகுமாரை குமுதம் தீராநதீ நேர்காணலுக்காக, 02.12.2011 அன்று இடிந்தகரையில் சந்தித்துப் பதிவு செய்த உரையாடல் இது. தீராநதி: உங்களுடைய இளம்பிராயம் பற்றிச் சொல்லுங்கள்? அம்மா கல்லுப்பட்டியில் காந்திய ஆஸ்ரமத்தில் படிச்சாங்க. அவங்களுக்குச் சொந்த ஊர் நாகர்கோவில், ராமன்புதூர் காந்தியத்தில் ஆழமான பிடிப்பு அம்மாவுக்கு உண்டு. எஸ்பொன்மணி அம்மாவின் பெயர். அம்மா ஒரு காமராஜர் பக்தை. காங்கிரஸீக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க ஆதரிப்பாங்க நேர் எதிர்நிலையில் அப்பா திராவிட சிந்தனை கொண்டவர். ஆனால் வீட்டுக்குள்ள எல்லாம் ஐனநாயக முறைப்படித்தான் நடக்கும். அப்பா யாருக்கும் ஓட்டுப்போடச் சொல்ல மாட்டாங்க. அம்மாவும் சொல்ல மாட்டாங்க. வீட்டுக்கு முன்பு பெயிர காமராஜர் படம் இருக்கும். அப்பா பெரியார், அண்ணா படங்களை வீட்டில் வைத்திருப்பாங்க. எனினும் ஒரு ஐனநாயகச் சூழலில் தான் நாங்க எல்லோரும் வளர்ந்தோம். அம்மா, அப்பா இரண்டுபேரும் பொது வாழ்க்கையில் ரொம்ப ஆர்வமாக இருந்தாங்க. அம்மா சமூக நலத்துறையில் பணிபுரிந்ததால் இந்தக் கணக்கு வழக்கு எழுதுவதற்காக பால்வாடி மற்ற பிற இடங்களிலிருந்து கிறிஸ்துவப் பெண்கள் வீட்டுக்கு வருவார்கள். வீட்டில் அவர்கள் பிரார்த்தனை செய்வாங்க. என்னையும் செய்யச் சொல்வாங்க அதன் மூலமாக சிறு வயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் மீது மரியாதை இருந்தது. ஆனால் நடைமுறையில் பழக்கவழக்கத்தில் நாங்கள் இந்துவாக இருந்தோம். சுடலை மாடசாமி கோயிலிருந்து இசக்கியம்மன் கோயில் வரை ஒரு கோயிலையும் அம்மா விடமாட்டாங்க. எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சுடலைமாடன் கோயில, முத்தாராம்மன் கோயில் எல்லாம் உண்டு. கொடைவிழாக்களுக்கு அந்தக் கோயில்களுக்கு வரிகொடுத்து வந்தோம். அப்பா தி.கங்கறதுனால அவருக்கு இவற்றில் பிடிப்பில்லை. இவற்றிலிருந்து அவர் விலகியிருந்தார். ஆனாலும் அம்மாவோடும் எங்களோடும் அவர் கூட வருவார். அப்பா விபூதி, சந்தனம் எதுவும் பூசமாட்டாங்க. பூஜையில் பங்கெடுக்கமாட்டாங்க. தீராநதி: முறைசார்ந்த கல்வி, முறைசாராத கல்வி பற்றிக் கூறுங்கள்? எத்தியோப்பியாவுக்குப் போன பின்னர் தான் கம்யூனிஸ்ட் அரசாங்கம் எப்படி அமல்படுத்தப்படுகிறது என்பதைப் படித்தேன், பார்த்தேன். மெங்கிஸ்ட் ஹெலமெரியம் என்கிற ஒருத்தர்தான் எத்தியோப்பியால ஆட்சியாளரா இருந்தார். ராணுவ ஆட்சியாளர் படுபயங்கரமான இரும்புக்கரத்தோட அந்த நாட்டை ஆட்சி செய்தார். தனி மனித சுதந்திரம் அங்கு சுத்தமாகக் கிடையாது. ரொம்ப இறுக்கமாக ஒருங்கிணைந்து மக்கள் மூச்சுவிடமுடியாத அளவுக்கு நெருக்கி வச்சிருந்தாங்க. அப்ப சோவியத் யூனியனின் நெருங்கிய நாடாக எத்தியோப்பியா இருந்தது. கம்யூனிஸம் அமல் ஆனா இப்படித்தான் இருக்கும் என்பதை அங்குதான் பார்த்தேன். அப்ப சோவியத்தில் பிரஷ்நேவ் ஆட்சியாளர். இது எண்பத்தொன்று எண்பத்தேழுகளிலிருந்த நிலை. ஹெலமெரியம் எல்லா சோசலிஸ்ட் நாடுகளுக்கும் போவாரு. அந்த நாட்டுத் தலைவர்கள் இங்க வருவாங்க. அந்த நாடுகளிலிருந்து நிறைய உதவிகள் கொடுப்பாங்க. இவையெல்லாம் எனக்கு கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் பற்றிய கல்வியாக இருந்தது. கம்யூனிஸ அரசாங்கம் என்பது நாம் நினைக்கிற மாதிரி சுதந்திரமான அதிகார மையமாக இருக்காது. ஒரு குழு பிறரை ஒடுக்கக்கூடிய மற்றொரு அதியார மையமாகத்தானிருக்கும் அப்படின்னு தெரிந்தது. 81, 87 வரையில் அங்கிருந்தேன். அங்க ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் இருந்தபோது யுனெஸ்கோ கிளப் என்ற ஒன்றை ஆரம்பித்தேன். அகில உலக புரிதலைக் கொண்டு செல்வதற்காக அதுவொரு உலகளாவிய இயக்கம். அரசாங்கத்துக்கு இந்த இயக்கம் தர்ம சங்கடமாக இருந்தது. நடத்தாதன்னு சொல்ல முடியல. யுனெஸ்கோ கூரியர் இந்த இயக்கம் நடத்திய இதழ்தான். உலகம் முழுவதும் சமாதானம் சுற்றுப்புறச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் கட்டுரைகளை அது உலகம் முழுக்கக் கொண்டு சென்றது. தீராநதி: இளமையிலேயே எப்படி இயக்கத்திற்கான தூண்டுதல் ஏற்பட்டது? பிறகு இயக்கம் ஒன்றை நாங்க ஆரம்பித்தோம். அப்ப இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் கப்பற்படைகள் எல்லாம் நிலைகொண்டிருந்தன. இப்படியிருந்தா நம்முடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்னு அந்நியப் படைகள் வேளியேற வேண்டுமென்று குரல் கொடுத்தோம். அப்பகுதியில் இவங்களுக்குள்ள ஒரு அணு ஆயுத யுத்தம் வந்தால் நாமெல்லாம் அழிந்து போவோம். இந்து மகா சமுத்திரத்தில் அந்நிய கப்பற்படைகள் நிற்கக்கூhது அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இவ்வமைப்பில் தீர்மானம் போட்டோம். வித்தியசமான ஒரு குழு எங்கள் குழு உலகளாவிய விஷயங்களில் ஆர்வம் காட்டினோம். அது முக்கியமான காலகட்டமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் முதன்முதலாக நாங்கள் அணுசக்தி பற்றிப் பேச ஆரம்பித்தோம். அணுசக்தியும் அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று உறவு கொண்டவை என்பதை இணைத்துப் பேசினோம். தீராநதி: உங்களுடைய அரசியல் சார்பு நிலை கட்சிகள் சார்ந்து இருந்ததா? உதயகுமார்: எதுவும் கிடையாது. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். உறுப்பினரெல்லாம் இல்லை. ஈடுபாடு இருந்தது. யுனெஸ்கோ அமைப்பை எத்தியோப்பியாவில் ஆரம்பித்ததை அந்த அரசாங்கம் விரும்பவில்லை. அரசியல் கல்வியை அங்க பாடத்திட்டத்திலேயே சொல்லிக் கொடுப்பாங்க. அவற்றில் மேற்கத்திய நாடுகளில் எதுவும் கிடையாதுங்கிற மாதிரி பாடங்கள் இருக்கும். அரசியல் கல்வியை நானும் அந்த மாணவர்களுக்குப் பாடம் நடத்தியிருக்கிறேன். அங்கே என்னுடைய சம்பளத்தையே யுனெஸ்கோ தான் கொடுத்தது. யுனெஸ்கோ கிளப்பில் மாணவர்களைத்தான் தலைவராய் நியமிப்போம். செயலாளர், பொருளாளர் எல்லாம் மாணவர்கள்தான். ஒவ்வொரு வாரமும் கூட்டங்கள் நடத்துவோம். பிற தூதரகங்களுக்குக் கடிதம் எழுதி தகவல்கள் வாங்கி அதனை வெளியிடுவோம். தொடர்ந்து மாணவர் இதழ் ஒன்றை கையெழுத்துப் பிரதியாகக் கொண்டு வந்தோம். இந்த நடவடிக்கைகள் எத்தியோப்பிய அரசுக்கு நெருடலை ஏற்படுத்தியது. அரசாங்கம் எங்களைக் கண்காணிக்க மாணவ ஒற்றர்களை நியமித்திருந்தது. அவர்கள் மூலமாக அரசாங்கத்திற்கு எதிரா பேசுறோம் என்கிற செய்தி பரவி, அரசாங்கம் சந்தேகப்பட்டது. மீண்டும் அடுத்த ஒப்பந்தத்தில் மீண்டும் எத்தியோப்பியாவில் ஆசிரியர் வேலையிலிருந்தால் ஜெயிலுக்குப் போக வேண்டிரவம் என்கிற நிலைமை. அதனால் ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் திரும்பி வந்துவிட்டேன். தொடர்ந்து யுனிவர்சிட்டி ஆஃப் நோட்டர் டேம்ல சமாதானத்திற்கான ஆய்வு பற்றிப் படிப்பதற்கு உதவித் தொகை கிடைத்தது. என்னைப் பரிந்துரை செய்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து ஒரு பெண்மணி. அவர்களை 1986-ல் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கில் கட்டுரை படிக்கும் போது சந்தித்தேன். உன்னைப் பரிந்துரை செய்திருக்கிறேன். அட்மிஷன் கிடைத்து உனக்கு விருப்பமும் இருந்தால் போ என எழுதியிருந்தார்கள். நானும் அந்தக் காலகட்டத்தில் குழப்பத்திலிருந்தேன். தங்கை ஒருவரின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. பெரிய தங்கைக்குத் திருமணத்தில் சில பிரச்னைகள் இருந்தன. அப்போ எனக்கு ஊரில் இவற்றைத் தீர்க்க வேண்டிய சூழ்நிலை. 89ன் பிற்பகுதியில் பிரச்சினைகள் ஓரளவு சரியான பின் ஆஸ்திரேலிய அழைப்பை ஏற்று அங்க போயி எம்ஏ பண்ணினேன். பயணச் செலவு, படிப்புச் செலவு உணவுச் செலவு, தங்கும் செலவு எல்லாம் அவங்க கொடுத்தாங்க. அதோடு கைச் செலவுக்கு 100 டாலர் கொடுத்தாங்க. பதினைந்து நாடுகளிலுள்ள பதிமூன்று ஆண்களும் பெண்களும் ஒரே கட்டடத்தில் தனித்தனியறையில் தங்கியிருந்து படித்தோம். அந்த இடத்தின் பெயரே பீஸ் அவுஸ். அப்போ என்னுடைய பேராசிரியர் ஒருவர் யுனிவர்சிட்டி அவாய்ல வேலை பெற்றுத் தந்தார். ஒரு பேராசிரியருக்கு ஆய்வு உதவியாளராக வேலை செய்தேன். பின்னர், அங்கு தான் பிரசின்டிங் த பாஸ்ட் என்கிற என்னுடைய பி.எச்.டி ஆய்வுப் படிப்பையும் முடித்தேன். நம்முடைய சரித்திரத்தை ஆர்எஸ்எஸ், பிஜேபி. விஎச்பி எப்படி அரசியல் அதிகாரத்திற்காக மீள்உருவாக்கம் செய்றாங்க என்பது தான் எனது பிஎச்டி ஆய்வு. எம்.ஏ ஆய்வு இலங்கை பிரச்னை பற்றியது. அதை புத்தகமாகவும் அமெரிக்காவுல வெளியிட்டிருக்காங்க. பிச்டி ஆய்வுல என்ன பண்ணினேன்னா ராமாயணம், மகாபாரதம். ராம்ஜென்ம பூமி, ராம் ரக்ஷா, காந்தியின் ராம் ராஜ்யம் இவற்றையெல்லாம் இணைத்து வல்லரசாகனும் அணு ஆயுதம் தயாரிக்கணும் என்கிற கருத்து இந்திய அரசுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை வெளிப்படுத்தி எழுதியிருந்தேன். பிஜேபி அரசு வரும்போது நானும் இந்து பத்திரிக்கை ஆசிரியர் என் ராமும் சேர்ந்து பிஜேபி அரசு கண்காணிப்பகம் ஆரம்பிச்சோம். அப்ப இந்தியாவில் பத்துப் பதினைந்து அறிவு ஜீவிகளுக்கு பிஜேபி ஆட்சி வந்தபின் நிலைமை என்னவாக மாறும் என்பதைப் பற்றி எழுதினேன். ராம் உடனடியாகத் தொடர்பு கொண்டு நீ சொல்வது உண்மை என்றால் அறிஞர்கள் பங்கெடுக்கிற மாதிரி ஒரு விவாத மேடை அமைப்போம் என்றார். உடனே ஒரு இணையதளத்தை அதற்காக ஆரம்பிச்சோம். அமெரிக்காவுல இருந்தபடியே பண்றதுக்காக ஆறு வருடம் விஎச்பி ஆர்எஸ்எஸ். பிஜேபி பற்றி நிறைய படித்தேன். உளவியல். சமூகவியல் அரசியல் எல்லாம் படிச்சதால அது நம்பிக்கையாகவும் உதவியாகவும் அமைந்தது. கேஎன் பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏஜி நுரானி, ஆஸ்கர் அலி இன்ஜினியர் அப்படி இதில் நிறையப் பேர் இணைந்தார்கள். நிறைய விவாதங்கள் நடந்தன. பத்திரிகையில் இதுபற்றி செய்தி வந்தது. ராமுக்கும் எனக்கும் கொலைமிரட்டல் வந்தது. இவையெல்லாம் பிஜேபி அரசு கீழே விழும் வரையில் நடந்தது. அந்த அரசு விழுந்தவுடனே அதையே கம்யூனிசம் வாச், கவர்ன்மெண்ட் மானிட்டர் என மாத்தினோம். இதெல்லாம் என்னுடைய அரசியல் பின்னணி. நோம் சாம்ஸ்கியை நேரில் பார்த்ததில்லை. அவரது நூல்கள் வாசித்திருக்கிறேன். யொகான் கால்டும் சாம்ஸ்கியை போன்றே அமெரிக்காவை விமர்சனம் செய்கிற அறிஞர் ஆவார். அவர்தான் என்னுடைய பேராசிரியர். அவர் ஒரு குழு ஆரம்பித்தார். அதில தொடக்கத்திலிருந்து பவுண்டிங் உறுப்பினரா யிருக்கிறேன். அதற்காக இணையத்தில் எல்லா வருடமும் இரண்டு வகுப்புகள் பாடம் நடத்துறேன். வீட்டுல சின்ன வயசுல ஒரு விளக்கின் முன்பாக காந்தி ஆசிரமப் பாடல்களைத்தான் பாடுவோம். பஜனைப் பாடல்களை அம்மா பாட வைப்பாங்க. அம்மா கிராம சேவிகா வேலையிலிருந்தாங்க. ஓய்வு பெறும்போதும் மாவட்ட அதிகாரியாக ஓய்வு பெற்றாங்க. இந்திய மார்க்சிஸ்ட் குழுக்கள் சின்ன வயதுல ரொம்ப கவர்ச்சியாக இருந்தது. எண்பத்தேழுகளில் நார்வேயில் படிக்கப் போயிருந்தேன். முடிச்சிட்டு வரும்போது சோவியத் வழியாக வரும் வாய்ப்புக் கிடைத்தது. அதுவும் மார்க்சிய அரசு பற்றிய எனது கற்பனையை உடைத்தது. நம்ம நாட்டில் உள்ள வளம்கூட அங்கு இல்லை. செழிப்பில் அது அதிருப்தியைத் தந்தது. மக்களை இறுக்கமாக ஒருங்கிணைத்து வச்சிருந்தாங்க. மாஸ்கோ நகரத்தில் அனுமதித்த வழியாகத்தான் போக முடியும். இறுக்கமான கண்காணிப்பு வேறு எவரும் போகமுடியாது. இதையெல்லாம் பார்த்திட்டு அந்த சிந்தாந்தமே சரியில்லன்னு ஆகிப்போச்சு எனக்கு. அதனால் மார்க்சியத்தைக் குறை சொல்லல. எப்படி காந்தியத்தை நேரு இந்தியாவில் அழகாக கொலை செய்தாரோ அதுபோல கம்யூனிசத்தை ஸ்டாலின் வகையறாக்களும் கொன்னுட்டாங்க. அப்பா தி.க. திமுகன்னு இருந்ததால இவ்வியங்கங்களும் ஆதிக்கமற்ற சமுதாயம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றெல்லாம் சொல்வாங்கல்ல? கம்யூனிச வாடையோடு சமத்துவம் அது இதும்பாங்கல்! அதனால அவங்க பேர்லயும் ஒரு கற்பனை இருந்தது. பின்னாடிதான் அவங்களுக்கும் இதுக்கும்மெல்லாம் ஒரு சம்பந்தமும் கிடையாதுன்னு தெரியவந்தது. 2001ல திரும்பி வந்த பிறகு அரசியல் பக்கமே திரும்பல. அப்பா அரசியல்ல ஈடுபடச் சொன்னாங்க. எனக்கு இந்த அசிங்கமான ஆட்களோட நடக்கவே கேவலமா இருந்தது. அவங்க பேசுற மொழி, கலாச்சாரம் எதுவும் எனக்கு ஒத்துக்கல. தீராநதி: தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவி, குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? உதயக்குமார்: 1992ல் எனக்கும் மீராவுக்கும் திருமணம் நடந்தது. சென்னையில திருவேணி அகாதமி என்கிற நர்சரி ஸ்கூல்ல மனைவி வேலை பார்த்திட்டிருந்தாங்க. சென்னையில அவங்க அம்மாவும் எங்க அம்மாவும் நண்பர்கள். எத்தியோப்பியாவில் திருநெல்வேலியில் சேர்ந்தவர் என்னோட வேலை பார்த்தாரு. அவருடைய மகளும் எனது மனைவியும் நண்பர்கள். அந்தப் பொண்ணு என்கிட்ட சொல்வா. இந்த மாதிரி வெளிநாட்டுக்குப் போகணும்னு விருப்பமிருக்கு. இந்தியாவுல எதையாவது செய்யணும்னு விருப்பமிருக்குன்னு சொல்வாங்க. சந்திச்சு கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணினோம். பிறகு அவாய்க்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க எம்எஸ்டபுள்யூ பண்ணினாங்க அவங்க எம்ஏ ஆங்கில இலக்கியம் தான். அங்கேயே சமூக சேவகியா வேலை பார்த்தாங்க கொஞ்ச நாளு. நான் யுனிவர்சிட்டி வேலை பார்க்கும்போது அவங்க சோஷியல் ஒர்க்கர் ஆக வேலை பார்த்தாங்க. இரண்டு பையன்கள் எங்களுக்கு சூர்யா, சத்யா. பெரியவன் எட்டாவது வகுப்பு படிக்கிறான். சின்னவர் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். காந்தியின் சத்தியாகிரகம் பாதிப்பில் சின்னவனுக்கு சத்யா என பெயரிட்டோம். குழந்தைங்க பிறந்த பிறகு எங்கள் இருவருக்குமே குழந்தைகளை அமெரிக்காவுல வளர்க்கக்கூடாது என்கிறதுல ரொம்ப தீவிரமாயிருந்தோம். ஊருக்கு வந்து ஏதாவது பண்ணணும் என்கிற எண்ணமும் இருவருக்கும் இருந்தது. சொந்த நாட்டிலிருந்து நிறைய பெற்றிருக்கிறோம். திருப்பிக் கொடுக்க வேண்டும். இருவருக்குமே பள்ளிக்கூடம் நடத்தணும்னு ஆர்வமிருந்தது. அங்க இருக்கும்போதே எங்களுடைய சேமிப்பில் நாகர்கோவில்ல காமராஜ் பாலிடெக்னிக் பக்கத்தில் பழவிளையில் நிலம் வாங்கிப் போட்டோம். அது முழுக்க எங்களுடைய உழைப்பு. நாங்க மிக எளிமையாக வாழப் பழகிக் கொண்டோம். ஓட்டல்ல போய் எல்லாம் சாப்பிடறதில்ல. 2001ல் பழவிளையில் எங்கள் இடத்தில் பள்ளிக்கூடம் கட்டினோம். நிறையப்பேர் சொன்னாங்க டவுனுக்குள்ள நிறைய கூட்டம் வரும் அப்படீன்னு நாங்க அமெரிக்காவ இங்க கொண்டு வர விரும்பவில்லை. ஏற்கனவே காலனியாதிக்கத்தின் கீழ் கஷ்டப்படுகிற ஒரு நாட்டுல திரும்பவும் மேலைநாட்டு மோகத்தை உருவாக்க விரும்பல. இன்னொன்று கிராமப் புறத்தில் உள்ள மக்களுக்குத்தான் எங்களுடைய கல்விமுறை அவசியம் என்ற நினைத்தோம். எங்களுடைய மாணவர்கள் எல்லாமே மீனவக் குடும்பத்திலிருந்தும் சாதாரண இந்து நாடார் குடும்பத்திலிருந்தும் வர்ற பிள்ளைங்க. எல்லாமே முதல் தலைமுறைக் குழந்தைகள். இவங்க பெற்றோர்கள் எல்லாமே முறை சார்ந்த கல்வி கற்றதில்லை. பெரும்பாலானவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. பொதுவாக. எல்லாரும் கிராமத்திலிருந்து டவுனுக்குத்தான் வரவிரும்புறாங்க. யாரும் டவுன்ல இருந்து கிராமத்துக்கு வர விரும்பவில்லை. எட்டாம் வகுப்பு வரைக்கும் இப்ப இருக்கு. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வகுப்பாக அதிகரிச்சிட்டு வாரோம். அரசு பாடத்திட்டத்தைத்தான் உபயோகப்படுத்துறோம். ஆனால் துணைப்பாடமாக சமாதானக் கல்வி, விவசாயம் பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளைக் கொண்டே காய்கறிகள் வளர வைக்கிறோம். செயற்கை உரங்கள் போடாம பூச்சி மருந்து போடாம விவசாயம் உணவு பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்துறது முக்கியமான பணி. ஹிரோஷிமா தினம். காந்தி ஜெயந்தி எல்லாம் பெரிசா கொண்டாடுவோம். அப்ப உலக சமாதானம் பற்றிய விஷயங்களைச் சொல்லித் தருவோம். பிள்ளைகளுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டால் பெரிய குழந்தைகளை வைத்து விவாதித்து அவங்களை வைத்தே தீர்த்துக்கச் சொல்றது. ஆசிரியர்கள் தலையிடறதில்ல. அந்த மாதிரி சுற்றுச்சூழல் விஷயங்கள் பற்றி குழந்தைகளிடம் அதிகம் பேசுகிறோம். வகுப்பறைக்குள்ளேயே ரூமுக்குள்ள குழந்தைகளை அடைச்சுப் போடறதில்லை. பிள்ளைகள வெளிய கூட்டிட்டுப் போய் ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்றோம். ஆங்கிலப் பள்ளிதான். ஆனாலும் தமிழுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆங்கிலத்தில்தான் பேசணும்னு கட்டாயப் படுத்துறதில்லை. பெற்றோர் அப்படி விரும்புறாங்க குழந்தைகள் விஷயத்துல பெற்றோர்கள்தான் பிரச்சினையாக இருக்கிறார்கள். விலையுயர்ந்த ஆங்கிலப் பள்ளிகளிலிருந்து குழந்தைகளை எங்களிடம் ஆற்றுப்படுத்துதல் மற்றும் ஆலோசனைகளுக்காக கூட்டிட்டு வர்றாங்க. குழந்தைகளைப் பற்றி நிறைய புகார்களோடு அவர்கள் வருவாங்க வீட்டில் பெற்றோர்களிடம் கோபப்படுகிறார்கள். ஆசிரியர்கள் சொல்லுறதைக் கேட்கிறதில்லை இப்படி பொதுவாக குழந்தைகளின் இயல்பை ஒடுக்குவதைத்தான் கல்வின்னு நம்புற மனோபாவம் இருக்கு. ஆசிரியர்கள் படிபடின்னு கஷ்டப்படுத்துறதுக்கு பிள்ளைங்களால ஈடுகொடுக்க முடியல. படைப்பாற்றல் உள்ள தலைமைப் பண்பு கொண்ட குழந்தைகள் ஒடுக்கப்படுகிறார்கள். நிறைய புத்திசாலித்தனமான குழந்தைகங்களாக இருக்கும். ஆனா பள்ளிக்கூடம் அதுங்களுக்கு ஒத்துக்கல. பிற பள்ளிகளுக்கு நானும் என் மனைவியும் சென்று குழந்தைகளுக்கு ஆலோசனை தருகிறோம். குழந்தைகளுக்கு ஆசிரியர்களோடு மட்டுமல்ல. பெற்றோர்களோடும் கம்யூனிகேஷன் இல்லை. மாறும் பருவப் பிரச்சினைகள் பத்தி குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறோம். குழந்தைகளோடு பேசுவதற்கு இன்று ஆட்கள் இல்லை. பருவப் பிரச்சினைகள் காரணமாக தற்கொலை, பெற்றோர்கள் ஆசிரியர்களோடு சண்டை போடுறது. இப்படியெல்லாம் வருது. குழந்தைகளின் உணர்வு மாற்றங்களுக்கான வெளிப்பாடு இல்ல. இன்புட் நிறைய வருது. ஆனால் அவுட்புட் இல்ல. தொலைக்காட்சிகளில் அரைகுறையான பாலியல் செய்திகள் தொடர்ச்சியாக வந்துகிட்டேயிருக்கு. பல்வேறு முரண்படானா பாலியல் குறியீடுகள் குழந்தைகளுக்குப் போய்க்கிட்டே இருக்கு. நிறைய பள்ளிகளிலிருந்து இதற்காக கூப்பிடறாங்க. எங்கள் பள்ளியில் பாலியல் கல்வி பற்றிச் சொல்லித் தருகிறோம். கொஞ்சம் முற்போக்கான பள்ளிக்கூடங்களிலிருந்து இதற்காகவும் கூப்பிடுகிறார்கள். நாம செக்ஸ் பற்றி குழந்தைகளிடம் பேசமாட்டோம். ஆனால் குழந்தைகளுக்கு இன்புட் வந்துகிட்டிருக்கு. ஆம் பேசவும் முடியாது. ஆனா. கிடைச்சிட்டேயிருக்கு அப்ப நிறைய பிரச்னைகள் வருது. சாக்கர் எங்களுடைய பள்ளிக்கூடம் சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பது சாக்கரை குறிப்பிடுவது. இதை உள்ளூர்ல உள்ள இந்து அமைப்புகள் எல்லாம் என்ன நினைச்சிட்டாங்கன்னா இதுவொரு கிறிஸ்டியன் பெயர். இவங்க இரண்டு பேரும் மதம் மாறிட்டாக். அமெரிக்க இவங்கள வச்சி இப்ப இங்க உள்ள ஆட்கள மதம் மாத்துறாங்க அப்படிங்கறமாதிரி பிரச்சாரம் பண்ணிவிட்டாங்க. வழக்கமான பள்ளிக்கூடத்தில் எங்கள் இருவருக்கும் விருப்பம் இல்லை. அதனால தான் கம்யூனிட்டி சென்டர்ன்னு வைத்தோம். கலைஞர்கள். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கதை சொல்வதற்காக எங்க அப்பா. அம்மா வருவாங்க. நிபுணர்களைக் கூட்டிட்டு வந்து பிள்ளைகளோட உரையாடச் செய்வோம். கல்லூரிகளில் செமினார் இநத மாதிரி தான் கல்வி முறை எங்களிடம் பிள்ளைகளைக் கேள்வி கேட்க வைப்பது மணி அடித்து வகுப்பு நடத்தும் கல்விமுறை முட்டாள்களை உருவாக்கக் கூடியதாகும். எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் இதுவரையில் நன்கொடையாக பத்து ரூபாய் கூட வாங்கியது கிடையாது. கட்டடத்துக்குத் தாங்க அதுக்குத் தாங்கன்னு வாங்கிதில்லை. கட்டடம் நிலம் எல்லாம் நானும் எனது மனைவியும் உழைத்து சம்பாதித்தவை. வருடந்தோறும் யூரோப்புக்கு ரெண்டு மூணு தடவையாவது போயிருவேன். வகுப்புகள் நடத்துவதற்குப் போற இடங்கள்ல நல்ல காசு கொடுப்பாங்க. என்னுடைய ஒரு மணி நேர வகுப்புக்கு 125 யூரோஸ் கொடுப்பாங்க. அந்த அளவுக்கு சம்பாதிக்கிறேன். பணம் வருது. யாரிடமும் எதுவும் சுயமரியாதையை விட்டுக் கேட்பதில்லை. அது அப்பாவிடமிருந்தே வந்து தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்ட பழக்கம். சிலர் சொல்வாங்க. அமெரிக்காவுல உங்களுக்குத் தொடர்பிருக்கு. நீங்க நினைச்சா நிறைய பணம் சம்பாதிக்கலாம். அப்படீன்னு. இந்தியா ஒரு ஏழைநாடு. இங்க வாழ்றவங்க பிச்சைக்காரங்கன்னு ஒரு இமேஜ் வெளிநாடுகள்ல இருக்கு அதனாலேயே எவர் கிட்டயும் உதவின்னு கேட்கறதில்ல. எங்களுடைய விழிப்புணர்ச்சியில் தெளிவாய் இருக்கிறோம். அமெரிக்கா போனதாலதான் சம்பாதிச்சு இந்தப் பள்ளிக்கூடத்தை உருவாக்க முடிந்தது. ஆனா எக்காரணம் கொண்டும் அமெரிக்கக் கருத்தியலையோ அமெரிக்கத் தன்மையையோ ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல. தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருப்பேன். தீராநதி: உங்களுக்கு அமெரிக்காவோடும் அமெரிக்க அரசாங்கத்தோடும உள்ள உறவு எத்தகையது? உதயகுமார்: அமெரிக்காவோடு நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். நிறைய நண்பர்கள் அங்கு இருக்கிறார்கள் அங்கு படிக்கும்போதும் வேலை பார்க்கும் சமயங்களிலும் அமெரிக்க அரசாங்கத்தை எதிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நான் இடதுசாரி சித்தாந்தம் உள்ளவன் என்பதால் அமெரிக்கவுக்கு எதிராக நிறைய எழுதியிருக்கிறேன். அமெரிக்க நியூஸ் பேப்பர்களிலும் எழுதியிருக்கிறேன். நிறைய பேசியிருக்கிறேன். அந்த சமூகத்தோடு நிறைய நெருங்கிய தொடர்பிருக்கு. நெருங்கிய நண்பர்கள் இருக்கிறாங்க. ஆனால் அமெரிக்க அரசாங்கத்தோடு நிறைய உராய்வுகள் வருது. என்னைப் பற்றி அமெரிக்க அரசாங்கம் தனி கோப்பு வைத்திருக்குது. ஒவ்வொரு தடவை அந்த நாட்டுக்குள்ள நுழையும்போதும் பெரிய விசாரணை நடத்தித்தான் உள்ள விடுவாங்க. அமெரிக்காவோட எனக்குள்ள தொடர்பு இதுதான். எனக்கு மற்றபடி அமெரிக்க அரசு நிறுவனங்களோடடோ அமெரிக்காவிலுள்ள தனிப்பட்ட ஃபவுண்டேஷனோடோ அல்லது அமெரிக்க அரசியல் குழுக்களோடவோ எந்தவிதத் தொடர்பு கிடையாது. அதில் ரொம்பத் தெளிவாயிருக்கிறேன். ஏன்ன நாம ஈடுபட்டிருக்கக்கூடிய விஷயம் அணுசக்தி. அ ணு உலைகள் பற்றியது. அமெரிக்காவில் இருக்கும்போதே இப்பணியை ஆரம்பிச்சிடேன். இதுபற்றிய செய்திகளை, தகவல்களை என்னிடமிருந்த ஆயிரக்கணக்கான மின்னஞ்சல்களுக்கு அனுப்பி விடுவேன். கூடங்குளம் அணு உலைகள் வேண்டாம் என்பதை 1998ல இருந்தே சொல்லிட்டிருக்கேன். அங்கேயிருந்து ஜனவரி1 2001ல ஊருக்கு வந்தவுடன் லு டேவிட் இதையே இங்க செய்திட்டிருந்தார். தீராநதி: அணுசக்தி, அணு உலை பிரச்சினைகள் தொடர்பான தீவிர ஈடுபாடு எப்படி ஏற்பட்டது. உதயகுமார்: அணுஉலை விஷயம் எனக்கு ரொம்ப முக்கியமாகப் பேசப்பட்டது. இது மக்களுக்கு எவ்வளவு பெரிய அழிவைத்தரும் என்பதை படிப்பின் வழியாகவும் அனுபவத்தின் வழியாகவும் உணர்ந்திருந்தேன். எனது தாத்தா பாட்டிகள்ல நாலு பேரு புற்றுநோயால் இறந்தவர்கள் என்னைய அதிகம் பாதித்தது அப்பம்மையின் மரணம். அவங்க பக்கத்துலதான் சிறிய வயதில் தூங்குவேன். வெத்தல போடுவாங்க. பாட்டி மண்டைக்காட்டுல பொறந்தாங்க. தாத்தாவுக்குத்தான் இசங்கன்விளை. எங்க ஊர்ல அவங்கள மண்டக்காட்டான்னு தான் சொல்வாங்க. பாட்டிக்கு புற்றுநோய் வந்தது. அப்பா அம்மாவுக்கு அதனை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கத் தெரியல. கொஞ்சம் முதிர்ச்சி அடைந்திருந்த நிலையில்தான் கண்டுபிடித்தோம். ஆரம்ப நிலையெனில் ஏதாவது செய்திருக்கலாம். நெய்யூர் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்தோம். பலனளிக்கவில்லை. இப்போ ஆரம்ப நிலையெனில் ஒன்றுமே இல்லை. மருத்துவத்துறை மாறியிருக்கு. ஆரம்ப நிலையில் வைத்தியம் பார்த்துவிட்டால் பத்துப் பதினைந்து வருடங்கள் சந்தோஷமாயிருக்கலாம். அப்போது ஆரம்ப நிலைக்கே சரியான மருத்துவம் இருக்கவில்லை. பாட்டியிடம் வெற்றிலை மணக்கும். பாட்டியோடு படுத்திருக்கும்போது பேன் குத்திக்கொண்டே ராமாயணம். மகாபாரதம், காசி. துரோப்பா. செம்புலிங்கம் கதைகள் எல்லாம் சொல்வாங்க. அவங்க ஒரு அழகான கதை சொல்லி கதைக்குள்ளே கிளைக்கதை. அதுக்குள்ள கிளைக்கதை என்று சென்று மீண்டும் மூலைக்கதைக்குள் வாறத என்று கதை சொல்வதற்கு விசேஷமான ஒருமுறை அவர்களிடம் தன்னிச்சையாக இருந்தது. என்னுடைய மேடைப்பேச்சு வெளிப்பாட்டுக்கு அவங்களுடைய இந்தக் கதை சொல்லல் முறை முக்கியமான காரணம். அம்மா, அப்பா இருவரும் வேலை நெருக்கடிகளில் இருந்ததால் அவங்களால குழந்தைகளுக்குச் செய்ய இயலாதவற்றை பாட்டி மூலம் அடைந்தோம். பாட்டி தான் தமிழ் உணர்வைத் தந்தது. பேச்சுத்திறனைத் தந்தது. உரையாடல் திறனை மேம்படுத்தியதும் பாட்டி தான். பேன் குத்திக்கேட்டே கதை சொல்வாங்க. தூங்கிப் போயிருவேன். பாட்டியோட மிக நெருக்கமாயிருந்தேன். புற்றுநோயால பாட்டி கன்னத்தில் ஓட்டை விழுந்து புழு ஏறி வீடெல்லாம் நாற்றம். அதன் பிறகு குழந்தைகளை பாட்டி பக்கத்துல விடமாட்டாங்க. எந்த வாய் எங்களுக்குத் கதை சொல்லி ஆளாக்கியதோ அந்த வாய்க்குப் பக்கத்தில் சென்று முத்தம் கூட தரமுடியவில்லை. இது சிறு வயதில் மிகவும் பாதித்தது. துடிதுடித்து இறந்தாங்க. கூடங்குளம் விஷயத்தில் நான் ஈடுபட்டதற்குக் காரணம் இதுதான். இதுவொரு சுயநலம்தான். இந்த வேதனையும் துன்பமும் அணுவுலைகளால பிறருக்கு ஏற்படக்கூடாது என்கிற வைராக்கியம். புற்றுநோய் உள்ளவங்களப் பார்த்தாலே என்னால் தாங்க முடியாது. நேற்று இரவு மணப்பாடுன்னு ஒரு ஊருக்குப் போயிருந்தோம். ஊர்த்தலைவர் மனைவிக்குப் புற்றுநோய். திருவனந்தபுரம் போயிருந்தோம். சோதனை செய்து பார்த்திட்டு திருப்பி அனுப்பிட்டாங்க என்று சொன்னார். புற்றுநோய்ன்னாலே எனக்கு பயம். பாட்டி மட்டுமல்ல. என் பிள்ளைங்க இந்த நோயால எதிர்காலத்தில் பாதிக்கப்படக்கூடாது. எனது மனதுக்கு இதமானவர்கள் அவஸ்தைப்பட்டு புற்றுநோயால இறந்ததை நெருங்கியிருந்து பார்த்தவன் நான் எனது சொந்த ஊரான இசங்கன்விளையில் தீவிரமா புற்றுநோய் பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இருபத்தைந்துக்கு அதிகமிருக்காங்க. எங்கள் வீட்டுக்கு நேர்எதிர் வீட்டில் கர்ப்பப்பை புற்றுநோயால அவதிப்படும் நோயாளியிருக்கிறாங்க. மணவாளக்குறிச்சி மணல் ஆலைக்கு இந்தப்பக்கம் உள்ளது சின்னவிளை. அந்தப்பக்கம் பெரியவிளை, மண்டைக்காடுபுதூர், கொட்டில்பாடு என்று கடற்கரை கிராமங்கள் நாடார் கிராமங்கள், மண்டைக்காடு, பருத்திவிளை என்று அனைத்து ஊர்களிலும் புற்றுநோய் அதிகம். அந்தப் பகுதிகள்ல நாங்க ஆய்வு பண்ணியிருக்கிறோம். டாக்டர் லால்மோகனும் வந்திருக்காரு. கூட்டம் நடத்தியிருக்கிறோம். இந்த ஊர்களுக்கெல்லாம் குறைந்தபட்சம் பத்துத் தடவையாவது போயிருப்பேன். நான் ஒவ்வொரு ஊர்கள்ல உள்ள பெண்கள் குழுக்களுடனும் பேசியிருக்கிறேன். தொற்றுநோய் மாதிரி இப்பகுதிகளில் புற்றுநோய் பரவியிருக்கு. என்னன்னா இப்பகுதி கடற்கரை மண்லதோரிடம் கிடைக்குது. மோனோசைட்டின் ஒரு கூட்டுதான் தோரியம். இது அதிகமான கதிரியக்கத்தன்மை கொண்டது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அதிகமிருக்கு. மழைபெய்யும்போது ஆறுகள் மூலமாக அடித்து வரப்பட்டு கடற்கரைகள் நோக்கி கொண்டுவரப்படுது இது. வள்ளியாறு தாமிரபரணியாறு மூலம் எல்லா இடமும் விரியுது. இதனை இந்த மணவாளக்குறிச்சி மணல் ஆலை தோண்டியெடுக்கும்போது மேலும் இயற்கை கதிரியக்கம் அதிகமாகுது. அதனை இயற்கையாகவே அப்படியே விட்டோம்னா ஒண்ணுமில்லை. அப்படியே படிஞ்சி படிஞ்சி இருக்கும். அப்பகுதி கடற்கரை மக்களுக்கு புற்றுநோய்க்குக் காரணம் இதுதான். அப்படியே மணல் மேல இருக்கிறாங்க. டாக்டர் லால்மோகன் இங்க செய்த ஆய்வில் ஆண்களுக்கு விரைகளில் புற்றுநோய் அதிகமிருக்கு மணல்கள்ல இருந்துதான் வலை பின்னுறதில் இருந்து சீட்டாடுவது வரையில் பழக்கமாயிருக்கு. ஏற்கனவே இப்பகுதிகள்ல நாற்பது சதவிகிதம் இயற்கையாகவே கதிரியக்கம் இருக்கு. அந்த கம்பெனி ஆலை மணல் பிராசசிங் பின்னர் அதிகமாகுது. தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி திருவனந்தபுரம் கொல்லம் ஆலப்புழை இப்படி ஆறு கடலோர மாவட்டங்களில் இயற்கையான கதிரியக்கமே நாற்பது சதம் அதிகம். வி.டி. பத்மநாபன், டாக்டர் லால்மோகன் போன்றோரின் ஆய்வுகள்ல. இது தெளிவாயிருக்கு. அரசு மணல் ஆலைகளும் தனியார் மணல் ஆலைகளும் இந்த தோரியத்தைக் கிளறிவிடும்போது மேலும் கதிரியக்கம் அதிகமாகுது. தோரியம் கலந்த மணல் உலகத்திலேயே மூன்று நாடுகளில்தான் அதிகமிருக்கு. நார்வே. துருக்கி, இந்தியா. நம்ம நாடு தோரியம் உள்பொருள் அதிகம் உள்ள மணல் நாடு. இந்த மணல் ஜெர்மனுக்கும் ஜப்பானுக்கும் போகுது. தீராநதி: கூடங்குளம் அணுவுலைகள் எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன? உதயகுமார்: என் மீது மட்டும் அரசாங்கம் தேசத் துரோக வழக்கு. அது இதுன்னு எண்பத்தைந்து வழக்குகளுக்கு மேல் பதிவு செய்திருக்காங்க. என்னைக் கைது செய்தாலும் கூட போராட்டம் தடைபடாத அளவுக்கு அடுத்தகட்ட தலைவர்களை நியமித்திருக்கிறோம். எனக்கு விலைபேசி நீங்க குடும்பத்தோடு அமெரிக்காவுல செட்டிலாகிடுங்கன்னு சொன்னாங்க. விபச்சாரம் செய்வதற்காக நான் இந்தியாவிற்குத் திரும்பி வரவில்லை என்று பதில் கூறினேன். என்னையும் என் குடும்பத்தினரையும் கடத்தி வச்சிட்டு உதயகுமார் பணம் வாங்கிட்டு தலைமறைவாகி விட்டார் என்று பிரச்சாரம் செய்து போராட்டக்குழுவுக்குள் பிளவை ஏற்படுத்தும் எண்ணம் இருந்தது பலிக்கவில்லை. இப்ப அமெரிக்காவுல இருந்து எங்களுக்குப் பணம் வருதுன்னு கிளப்பி விடுறாங்க. அரசாங்கம் இந்த மக்கள் போராட்டத்திற்கு எதிராக கூடுமானவரையில் எதையெல்லாம் செய்யமுடியுமோ, எல்லாவற்றையும் செய்யுது. அணுசக்தித் துறை அணு உலை ஆதரவு பிரச்சாரத்திற்காக மட்டும் உளவுத்துறை மூலமாக ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாங்கள் மக்களின் கடன் தொழிலிலிருந்தும் பீடி சுத்தும் தொழிலிலிருந்தும் கிடைக்கிற பணத்தில் இப்போராட்டத்தை நடத்துகிறோம் என்பதே உண்மை. பால பிரஜாபதி அடிகளாரை ஓய்டேவிட்டும் நானும் முன்னோடியே போய்ப் பார்த்திருக்கிறோம். 2001 காலகட்டத்திலேயே கூட்டங்கள் நடக்கும்போது வருவாரு. நல்லா பேசுவாரு. அருமையான சொற்பொழிவாளர். கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிச்சதும் போய் பார்த்தோம். பார்த்துப் பேசி இடிந்தகரைக்கு வந்தாரு கூடங்குளத்துக்கு வந்தாரு இடிந்தகரைக்கு நான்குமுறை வந்திருக்காரு. தொடர்ச்சியாக சென்னைக்கு எல்லோரும் போயிருந்தோம். இவரும் வந்திருக்காரு. தமிழக முதல்வர் சந்திப்பில் இவரும் இருந்தாரு. ஜெயலலிதாவிடம் பேசும்போது கூடங்குளம் அணுவுலைகள்ல தீவிரவாதத் தாக்குதல் ஏற்பட வாய்ப்பிருக்குன்னாரு. அவங்க இத்தகைய பேச்சை விரும்பவில்லை. ஏன் என்ன நடக்கும் நாங்களும் கடலோரத்துக்குப் பக்கத்தில தானே இருக்கோம். அப்படின்னாங்க. இவர் பேசியது பிடிக்கல. பின்பு விடைபெற்றுத் திரும்பும்போது எனது கையை பிடித்து முத்தம் கொடுத்தார். நம்ம சமுதாயத்தில் இப்படியொரு திறமையான ஆள் இருந்தது எனக்கு தெரியாமப் போச்சே. அப்படீன்னாரு. நான் உண்மையாக இப்ப ஒரு திருத்தலத்திலிருந்து சொல்றேன். இவர் முத்தம் தந்தவுடன் எனக்கு ஐயய்யோன்னு தோணிச்சி. எனக்கு ரொம்பவும் புகழ்றவங்க. கால்ல விழறவங்களைக் கண்டா பயம் வரும். பயந்தது அப்படியே நடந்தது. இடிந்தகரை மக்களும் அவரை ரொம்ப அன்பாக பார்த்தாங்க. எல்லாமே நல்லா இருந்தது. ஒரு கூட்டம் முடிந்ததும் சொன்னாரு. அணுவுலைக்கு எதிரான அடுத்த கூட்டத்தை சுவாமித்தோப்பில் நடத்துவோம்ன்னு. எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் போராட்டம் கடலோரம் கடலோரம்னு நடந்திட்டிருக்கு. அதற்கு வெளியில் நடப்பது போராட்டத்துக்கு மற்றொரு பரிமாணத்தையும் தரு. இது எல்லா மக்களுக்கும் உரிய பிரச்னைதானே என்று நினைத்தோம். நாடார் ஊர்ல முன்னணித் தலைவர் ஒருவர் நடத்துறேன்றான்னு மகிழ்ச்சியடைந்தோம். அன்று சாயுங்காலம் என்னைக் கூப்பிட்டுச் சொன்னாரு. அனுமதி கிடைக்காது போலிருக்குன்னு. ஐயா அதப்பத்திக் கவலைப்படாதீங்க நாங்க அனுமதி வாங்கியிருக்கிறோம். நாங்கள் வாங்கி தருகிறோம் என்று சொன்னேன். நாங்கள் அனுமதி பெற்ற பின் அவரைத் தொடர்பு கொண்டவுடன் அதுல சிக்கல் இருக்கு பார்த்துக்கிடுங்க அப்படின்னாரு நாங்க என்ன நினைச்சோம் பந்தல் எல்லாம் போட வேண்டி வரும். செலவு ஆகும். அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கிறாரு போல இருக்குன்னுட்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி கொண்டாடி போராட்டத்தை இடிந்தகரையிலேயே வச்சிருவோம்னு சொன்னேன். மென்முறை பற்றி ஒரு கருத்தரங்கம் நடத்துவோம். அகிம்சைங்கற வார்த்தை வேண்டாம். அதற்குப் பதிலான மென்முறைங்கற தமிழ்வார்த்தையே பயன்படுத்துவோம். இதுல ஐயா வழியில் மென்முறை அப்படி பேசுங்கன்னோம். வந்திருந்தாரு. அன்னைக்கும் அருமையான ஒரு பேச்சு. அற்புதமாகப் பேசினார். ஐயா வழியில் உள்ள மென்முறை பற்றி படிக்கணும். எழுதணும்ங்கறது என்னுடைய நெடுநாளைய ஆசை. அருமையாகப் பேசினாரு. மக்களுக்கும் நல்ல திருப்தியாக இருந்தது. அப்புறம் ரெண்டு மூன்று நாட்கள் கழித்து இரவு 9 மணியிருக்கும் தொலைபேசியில் அழைத்தார். முதல் கட்ட உண்ணாவிரதத்தை முடிச்சிட்டு இரண்டாங்கட்ட போராட்டத்தைத் தொடங்குகறதுக்கு முன்னாடி வீட்டிலிருந்தேன். பிரதமர பார்க்கப் போற காலகட்டம். உங்கள வந்து பார்க்கணும்னாரு வாங்கன்னேன். வந்தாரு. நீங்கள் தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளை ஏதும் வச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. ஆமா வச்சிருக்கேன். எங்கள் பள்ளிக்கூடத்தை நடத்துறதுக்கு ஒரு அறக்கட்டளைதான் வேணும்னுட்டாங்க அதில நானும் எனது மனைவியும் தான் உறுப்பினர். வேறெதும் கிடையாது அப்படீன்னு சொன்னேன். சுனாமி வேலை ஏதும் செய்தீங்களான்னு கேட்டாரு. இல்ல தொண்டு நிறுவனங்கள் மூலம் பணம் வாங்கி செய்யலான்னாங்க. ஐயா என்ன விடுங்க. தொண்டு நிறுவனங்கள் அரசியல் கட்சிகள விட கேவலப்பட்டுக் கெடக்கு நான் வரலன்னு விட்டுட்டேன் என்று சொன்னேன். கூடங்குளம் அணுவுலைகளுக்கு எதிரான போராட்டக் குழுவை உறுதிப்படுத்த வேண்டாமான்னு கேட்டாரு. யார் யாரெல்லாம் அதில இருக்காங்கன்னு கேட்டாரு அதிலிருக்கும் பத்துப் பேரோட பெயர் சொன்னேன். கூடங்குளத்திலிருந்து இரண்ட பேர் நான் உட்பட இந்து நாடார்களே நான்கு பேர் வந்திருக்கிறோம். கத்தோலிக்க ஃபாதர்கள் சிலபேர் இருக்காங்க. அப்படீன்னேன். ஆலோசனைக் குழுவுல ஐயா நீங்க, தூத்துக்குடி பிஷப், பாளையங்கோட்டை பிஷப் டேவிட், மதுரையிலிருந்து குருசாமி வழக்கறிஞர் இவ்வளவு பேரும் இருக்கிறோம்ன்னேன். போயிட்டு வாரன்யா எல்லா நல்லபடியா நடக்கட்டுன்னு சொல்லிட்டுப் போனாரு. இரண்டு நாள் கழிச்சி போராட்டத்துக்கு எதிரா அவருடைய சன் டிவி பேட்டி வந்தவுடன் நான் அழைத்தேன். போன் எடுக்கல. டாக்டர் லால்மோகனை கூப்பிட்டுக் கேட்டேன். அவரும் சொன்னாரு. நானும் பேட்டி பார்த்தேன். அதிர்ச்சியா இருந்தது. கேட்டதுக்கு நான் சொல்லாத டிவியில போட்டுட்டாங்கன்னு சொன்னாரு என்றார். இந்த சந்தர்ப்பத்தில் பிஷப் கூப்பிட்டுச் சொன்னாரு உதயகுமார் கவனமாயிரு நம்முடைய போராட்டத்தை சாதி ரீதியாக பிரிப்பதற்கான வேலைகள் நடக்குது. ஐம்பது லட்ச ரூபாய் இதற்குக் கைமாறியுள்ளதா எனக்குத் தகவல் வருது. உளவுத்துறையில் இருந்து கவனமாயிருக்கச் சொன்னாரு. இதை யார் செய்வாங்கற்கது குழப்பமாக இருந்தது. இப்ப கடைசியா நான் அணுவுலைக்குள்ள போய்ப் பார்த்தேன். ரொம்ப பாதுகாப்பா இருக்குன்னு வந்து அறிக்கை விடுகிறார். இதுபோலத்தான் சரத்குமாரும் டெல்லியில் என்னை பெருமிதப்படுத்தினார். இப்ப தலைகீழாயிட்டார். தீராநதி : கூடங்குளம் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தியதில் உங்கள் பங்கென்ன? உதயகுமார் : 2001ல இருந்து இதுவரைக்கும் அணுசக்தி பற்றி தொடர்ச்சியாக எழுதுவது பேசுவது என்று செயல்படுகிறேன். அணு இயற்பியல், பொருளாதாரம் அணு அரசாங்கம், அணு வியாபாரம் அரசியல் உலகளாவிய அணுசக்தி ஒப்பந்தங்கள் என்று பார்த்துப் போகும்போது இது எவ்வளவு சிக்கலான குழப்பம் நிறைந்த பொருள். இது மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல் படித்த மக்களுக்கே புரியாத ஒரு விஷயத்தை தனிப்பட்ட நலனுக்காக உபயோகிக்கிறாங்க. உருவாக்குறாங்கன்னு தெரிஞ்ச பிறகு எனக்கு உந்துதல் வந்து இதுபற்றிப் பேசுகிறேன். 2001 லிருந்து தொடர்ச்சியாக இதற்காக செயல்பட்டது தவிர எங்களுக்கு லாபமும் கிடையாது. பின்னணியும் கிடையாது. உண்மையாகவே சொல்லப்போனால் இதையொரு போராட்டமாக மாத்தணும்னு திட்டமும் கிடையாது. 2007ல் மாற்றம் வந்தது. அதுவரைக்கும் கூடங்குளம் பகுதி மக்களை இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி செய்து வைத்திருந்தார்கள். பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். பேச்சிப்பாறை தண்ணி வரும் உங்க ஊரு செழிப்பாகும். வெளியூர்ல இருந்து ஆட்கள் வருவாங்க. லாட்ஜ் கட்டி வாடகைக்கு விடலம். இப்படி இந்த ஊரு பெரிய வளர்ச்சியடைந்த ஊராகும். பணம் சம்பாதிச்சிரலாம் என்கிற நம்பிக்கையை மக்கள்கிட்ட ஏற்படத்தியிருந்தாங்க. கூடங்குளம் ஊருக்குள்ள நாங்கள் பேசப்போனா அடிக்க வருவாங்க. பெரிய கூட்டங்கூடிரும். பயந்து ஓடியிருக்கோம். அந்த ஊருக்குள்ளேயே போக முடியல. எல்லாம் கடலோர ஊர்கள்ல மட்டும்தான் அப்ப வேலை செய்ய முடிந்தது. ஏற்கனவே கடலோரத்தில் வாழ்ந்த மக்கள் விழிப்புணர்வோட இருந்தாங்க. அணுக்கதிர்வீச்சுன்னா என்ன. கசிவுன்னா என்ன. விபத்துன்னா என்ன என்பது பற்றியெல்லாம் நாங்களும் அவர்களிடம் பேசியிருக்கிறோம். 2007 வரையில் ஒரு மாற்றமும் நடக்கல. கூடங்குளத்தில ஒரு வளர்ச்சியும் நடக்கல பத்தாயிரம் பேருக்கு வேலையும் கிடைக்கல. இச்சந்தர்ப்பத்தில அணுசக்தித் துறை விளம்பரத்தில் ஒரு வார்த்தை போட்டியிருந்தான். அதுதான் இவனுக்கு ஓஹோ தலையில கைய வைக்கிறான். ஊரவிட்டுப் போச்சொல்றேன். போட்டுட்டுப் போகவேண்டி வரும் போலருக்கேன்னு தோணிச்சு ஊர்ல மணியெல்லாம் அடிச்சி ஊரைக் கூட்டி மக்கள் இதுபற்றிப் பேசினாங்க. அப்ப நான் கென்யா நைரோபியில் ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தேன். போயிட்டு வந்தவுடன் சுப்பிரமணியன்னு ஒருவர் கூடங்குளம் ஊரைச் சேர்ந்தவர். எங்க ஊருக்குள்ள மாற்றம் உருவாயிற்று நீங்க வாங்கன்னு கூப்பிட்டார். அதன் பிறகு தான் கூடங்குளம் ஊருக்குள்ள வந்தோம். அதுவரைக்கும் ஊருக்குள்ள வரமாட்டோம். நீங்க சொன்னதையெல்லாம் அப்ப கேட்கல இப்ப புரியதுன்னாங்க. அது வரையில் இப்பிரச்சினை நாடார். பரவர் பிரச்சினையாக இருந்தது. நாடார்கள் எல்லாம் அதுவரைக்கும் எப்படி பாத்தாங்கன்னா இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது இப்படி. இப்பதான் முதல்முறையா தெரியுது. இது அவனுக்கு பிரச்சினை நம்மள ஒண்ணும் செய்யாது இப்படி இப்பதான் முதல் முறையா தெரியுது. இது அவனுக்கு மட்டுமில்ல நமக்கும் பிரச்சினை அணுக்கசிவுக் கதிர்வீச்சு ஏற்பட்டா என்னாகும்? மீன் உணவு என்னாகும்? சாப்பாட்டுக்கு பிரச்சினை. அதன் பிறகு ஊர்களுக்குள்ளேயும் போய் பேச ஆரம்பித்தோம். கூடங்குளம் செட்டிகுளம் மற்றுமுள்ள நாடார் ஊர்களுக்குள்ளேயும் போவோம். துண்டு பிரசுரங்கள் கொடுப்போம். எங்களுக்கு எந்தவித நிதியுதவியும் கிடையாது. எந்த அறக்கட்டளைகளிடமிருந்தும் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் காசு வாங்கல. சில தனிப்பட்ட நபர்கள் உதவியிருக்காங்க. நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தில் தான் வருவோம். 2011ல ஜப்பான்ல ஃபுகுஷிமா நடந்தது நல்ல திருப்புமுனை. அதன் பிறகு மக்களுக்கு. இவனுக சும்மா சொல்லல. இவனுக சொன்னதெல்லாம் நடக்குதுன்னு எண்ணம் உறுதிப்பட்டது. அணுவுலை வெடிக்கும். வெடிச்சா சுற்றுவட்டார 30 கிலோமீட்டருக்கு இடத்திலிருந்து அப்புறப்படுத்துவாங்க ஊரைவிட்டுப் போகணும் அகதியா வாழணும். இந்தப் பயலுக சொன்னதெல்லாம் நடக்குது என்று வந்தது. அது எங்களுடைய மதிப்பை படுபயங்கரமாக மக்களிடம் அதிகப்படுத்தியது. 1988ல ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வர்றதாயிருந்தது. இன்று 2011 கிட்டத்தட்ட 23 வருடமாச்சி. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் ஆகுது. இவ்வளவு நாளில்லாமல் அணுசக்தித் துறை சொல்றான் கூடங்குளம் இயங்கப்போகுதுன்னு. அட அறிவு கெட்டவனுங்களா கொஞ்சமாவது புத்தி இருந்தா ஃபுகுஷிமா? ஃபுகுஷிமா விபத்தை நீங்க கொடுத்த டிவி வழியாகவே ஒவ்வொருவரும் பார்த்துவிட்டு சமயம் நானாக இருந்திருந்தால் சும்மா இருங்கடே பிறகு பாத்துக்கிடலான்னு சொல்லியிருப்பேன். 23 வருஷமா கிடந்தது. சவம் இன்னும் ஒரு வருஷம் கிடக்கட்டும் என்றிருப்பேன். ஆனால் இவன் இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பிக்கிறேன் என்றான். இரண்டாவது ஜூன்ல 1ம் தேதி பரிச்சாத்த ஓட்டம் ஃபுகுஷிமா நடந்து மூணுமாசத்துக்குள்ள இவனுகளுக்கு அறிவைப் பாருங்க. இவனுங்கெல்லாம் விஞ்ஞானி ஜூலை ஒண்ணாந் தேதி மாதா கோவில் முன்னால உண்ணாவிரதம் வச்சோம். எங்களுக்கு இந்த தேதின்னு தெரியாது. எங்களுக்கு இவங்க எந்தவித அறிவிப்பும் கொடுக்கல. தற்செயலான உண்ணாவிரதம் அது. அடுத்த நாளையில இருந்து கடபுட கடபுடன்னு அணு உலையில் இருந்து பலத்த சத்தம் புகை போக்கியில இருந்து கட்டுக்கடங்காத ஆவி இதையெல்லாம் கடலோர மக்கள் எல்லோரும் பாத்தாங்க. அப்பதான் இத இப்படியே விட்டா சரிப்படாதுன்னு மக்களுக்கு எண்ணம் உறுதிப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி ஆயிரக்கணக்கான மக்கள் கூடங்குளத்தில் திரண்டாங்க. அணுவுலையிலிருந்து எழும் சத்தம் எப்படியிருக்கும்னா குட்டுவத்தில் தண்ணிய சுழல விட்டு வர்ற சத்தத்த பத்தாயிரம் மடங்கு பெருக்குனீங்கன்னா வர்ற சத்தத்தை ஒத்தது அது உலகம் இடிஞ்சி தலையில விழுற மாதிரி சத்தம் கடுமையான சத்தம். கூடங்குளத்தில் இருந்து கூப்பிட்டாங்க. அப்பதான் ஃபுகுஷிமாவுக்கு நான் 15 நாட்கள் போயிட்டு வந்திருந்தேன். போயிட்டு வந்த அடுத்த நாளு ஆகஸ்ட் 11 என்ன நடக்குதுன்னு பார்த்திட்டு வருவோம்னு வந்தா. ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்காங்க. இந்த அணுவுலைகள் எங்களுக்கு வேண்டவே வேண்டாம். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுங்கள்னு மக்கள் சொல்றாங்க. அங்க நாங்க மக்களோட பேசிட்டிருக்கும்போதே செய்தி வருது. இடிந்த கரையில் கோயில் மணியடிச்சி ஊரக்கூட்டுறாங்க. உடனடியாக வாங்கன்னு. உடனே இடிந்தகரைக்கு வந்தோம். ஃபாதர் பங்களா முன்னாடி ஏகப்பட்ட கூட்டம் இடிந்தகரையில் கிட்டத்தட்ட பாதி ஊர் நிக்குது. அப்பத்தான் உடனடியாக ஆகஸ்ட் 18ம் தேதி உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்வோம்னு தீர்மானித்தோம். வேறு எந்தவிதமாகவும் மக்களைத் திரட்டவில்லை. ஆகஸ்ட் 16ந் தேதி இருபதினாயிரம் மக்கள் கடலோரப் பகுதி மக்கள் அருகில் உள்ள நாடார் கிராமங்கள்ல இருந்து என்று மக்கள் வந்து திரண்டாங்க. அந்த சூழ்நிலையிலும் செட்டிக்குளத்துக்காரன் வரல. அந்த ஊர் தலைமையில் இருந்தவர்கள் அணுவுலை ஆதரவுக் கொள்கை சார்ந்தவர்கள். இப்படி முதல்நிலை உண்ணாவிரதப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. நேர்காணல் சந்திப்பு: லட்சுமி மணிவண்ணன், கிருஷ்ணகோபால். தொகுப்பு: ரோகிணி | |||
Tuesday, January 31, 2012
ராஜிவ் கொலை
Sunday, January 22, 2012
தேசியத்தலைவர் உயிரோடுதான் உள்ளார்
மீண்டும் அவர் ஈழத்தின் வன்னிப் பகுதிக்குச் செல்ல வேண்டிய வாழ்க்கை நெருக்கடி இருந்தாலும், அதிக உணர்வுடன் பேசியது ஆச்சர்யம் கொடுத்தது! கவிஞர், எழுத்தாளர், தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.
பெண்ணியவாதி என்ற பல்வேறு முகங்களைக்கொண்ட தமிழ்க் கவி, போருக்குப் பின்னர் வதை முகாமில் அடைக்கப்பட்டு, இப்போது வன்னி நகரில் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்துவருகிறார்.
அவருடன் உரையாடியதில் இருந்து.
நீங்கள் சந்தித்த ஈழத்துக் கொடுமைகள் என்னென்ன?'
பதுங்கு குழியே படுக்கும் பாய் ஆகவும் செத்துவிழும் பாடையாகவும் மாறிப்போனது எங்களது வாழ்க்கை. ஆளுக்கு ஒரு மாற்றுத் துணி, குழந்தைகளுக்குக் கொஞ்சம் பால், குடிக்கச் சிறிதளவு தண்ணீர், கொஞ்சம் பருப்பு என இதை மட்டுமே தூக்கிக்கொண்டு... ஷெல் அடிக்கும் திசைக்கு எதிராக... காற்று அடிக்கும் திசையை நோக்கிச் சென்றுகொண்டே இருப்போம்.
ஓர் இடத்தைத் தேர்ந்து எடுத்து அங்கு பதுங்கு குழி தோண்டுவோம். குழந்தைகளை அதில் படுக்கவைத்துவிட்டு, நாங்கள் களைப்பு தீருவதற்காகக் குழியின் மேல் அமர்ந்து இருப்போம்.
திடீரென ஷெல் தாக்குதல் ஏற்பட்டால், குழிக்குள் குதித்து விடுவோம். சில இடங்களில் மேற்கூரை அமைத்து, அதன் மேல், மணல் மூட்டைகளைவைத்து பாதுகாப்பாகச் சில நாட்கள் வசித்தும் இருக்கிறோம்.
அந்த நேரங்களில், உணவுக்காக நாங்கள் பட்டபாடு எதிரிக்குக்கூட நேரக் கூடாது. ஆங்காங்கு இருந்த கிணறுகள் எங்கள் தாகத்தையும் பல நேரங்களில் பசியையும் தணித்தன.
பெரியவர்கள் நாங்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தாலும், பாலுக்கு அழும் குழந்தையை என்ன செய்வது? ரூ. 245 மதிப்புள்ள பால் மாவுப் பைகள் ரூ.2,000 வரை விற்கப்பட்டன.
கடைசியாக, அது ரூ. 3,000-க்குப் போய்விட்டது. சாயத் தண்ணீர் குடித்துதான் எங்கள் பிள்ளைகள் பிழைத்தன. எங்கள் குடும்பம் ஓர் இடத்தில் வசித்தபோது, என் மகன் இறந்துவிட்டதாகத் தகவல் சொன்னார்கள்.
அந்த நேரத்தில் நான் என் பேரப் பிள்ளைகளுக்கு பால் மாவு வாங்குவதற்காக அலைந்துகொண்டு இருந்தேன். என் கவனம் முழுவதும் கதறிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதே இருந்ததால், அவர்கள் கூறிய தகவலைக் கேட்டும், 'இங்கு எங்கே பால் கிடைக்கிறது?
என்றுதான் விசாரித்துக்கொண்டு இருந்தேன். ரொம்ப நேரம் அலைந்து கொஞ்சம் பால் மாவு வாங்கி வந்து குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டேன்.
அன்று இரவுதான், திடீரெனத் தோன்றியது. மகன் இறந்துவிட்டதாகச் சொன்னார்களே என்று!சற்றுத் தொலைவில் என் மகள் ஒரு பதுங்கு குழியில் இருந்தாள்.
உடனே, சென்று அவளுக்குத் தகவல் சொன்னேன். அப்போதுகூட எங்களுக்கு அழுகை வரவில்லை. இதுதான் அனைத்து மக்களின் மனநிலை. இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்குக் கண்ணீர் என்பதே கிடையாது. அது எந்தக் காலத்திலோ வற்றிவிட்டது.''
நீங்கள் பிரபாகரனைச் சந்தித்து இருக்கிறீர் களா?'
தமிழ்த் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்தேன். அங்கு, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை விளக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். பல நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன்.
அந்த நிகழ்ச்சிகளைப் பார்த்த தலைவர், என்னைப் பல முறை அழைத்துப் பேசிப் பாராட்டி இருக்கிறார். நான்கு முறை அவரிடம் விருது வாங்கி இருக்கிறேன். மூன்று முறை அவருடன் சேர்ந்து உணவருந்தி இருக்கிறேன்.
என் நிகழ்ச்சிகள் குறித்த அவரது கருத்தை, பிறர் மூலமும் சொல்லி அனுப்பி என்னைப் பரவசப்படுத்தி இருக்கிறார். தமிழ்ப் பண்பாடு குறித்து நிறையப் பேசுவார். அவர் என்னுடைய விசிறி என்று சொல்லியதாகச் சொல்வார் கள்.
ஒரு முறை மேடை நாடகம் ஒன்று நடத்தினேன். அதற்கு வந்திருந்தவர், நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை அழைத்துப் பாராட்டினார். அப்போது, நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
அவருடன் வந்திருந்த மெய்க்காப்பாளர்கள், 'அவர் அப்படித்தான் பேசிக்கொண்டே இருப்பார். ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காக நாங்கள் இதற்கு மேல் அனுமதிக்க முடியாது’ என்று கூறினர். தலைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றுச் சென்றார். தலைவரைப் பற்றிய நினைவுகள், அவருடைய கருத்துக்கள் என்னுள் இன்னும் ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன... இருக்கும்.''
பிரபாக இறந்துவிட்டதாகச் சொல்வது உண்மையா?''
''2009 மே 19-ம் தேதி அவர் இறந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு 14-05-2009-ம் தேதி, தனது நண்பர்களுடனும் வளர்ப்பு நாய்களுடனும் கடற்கரையில் தலைவர் பிரபாகரன் நடந்து செல்வதை நான் பார்த்தேன்.
அப்போது, அவர் சிவிலியன் உடையில்தான் இருந்தார். (அதாவது புலி களின் சீருடையில் இல்லை!) ஆனால், 19-ம் தேதி பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அது, போர் முனையில் இருக்கும் புலிகளை நிலைகுலையவைக்க ராணுவம் செய்த சதி என்றுதான் நம்பினோம்.
அதற்கு முன்பே போர்க்களத்தில் இருந்து அவரை வெளி யேற்றத் தளபதிகள் எவ்வளவோ முயற்சி எடுத்தனர். ஆனால், தலைவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 'கடைசி வரை தமிழர்களுக்காகப் போராடுவேன்’ என்று கூறிவிட்டார்.
குண்டடிபட்டு இறந்தது பிரபாகரன்தானா என்று இலங்கை ராணுவத்துக்கு மட்டும் அல்ல... அவர் உடலை அடையாளம் காட்டியவர்களுக்கும் சந்தேகம் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் மரணச் சான்றிதழ் தரவில்லை.
''இறுதிக்கட்டப் போர் நடந்த நேரத்தில் பிரபாகரனுடைய திட்டம் என்னவாக இருந்தது என அறிவீர்களா?''
போர் உக்கிரம் அடைந்திருந்த நேரத் திலும் நம்பிக்கையை இழக்காமல் மன உறுதியோடுதான் இருந்தார். 2008-ம் ஆண்டு மே மாதம் 20-ம் தேதி இயக்கத்தின் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைவர் பிரபாகரன், 'இப்போது நம்மிடம் தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்கிறார்கள்.
ஆனால், ஆயுதங்கள் இல்லை. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் இலங்கை ராணுவம், நவீன ஆயுதங்களால் நம்மைத் தாக்குகிறது. இருந்தாலும், நாம் கடைசி வரை போராடுவோம். நான் வீர மரணம் அடைந்தால், இந்த உரிமைப் போரைத் தமிழர்கள் நிறுத்திவிடக் கூடாது.
எனக்கு அடுத்து யார் இருக்கிறார்களோ... அவர்கள் ஒற்றுமையுடன் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். இதுதான் நமது லட்சியம்’ என்று முழங்கினார். 10 நிமிடங்கள்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது நானும் இருந்தேன். தலைவர் உடனே கிளம்பிச்சென்றுவிட்டார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த இடத்தில் கூரை பிரிக்கப்பட்டு, அங்கு கூட்டம் நடந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்குத் தடயங்கள் அழிக்கப்பட்டன.',
இன்றைய நிலைமைகளைச் சொல்லுங்கள். மீள்குடியேற்றம் என்பது சரியாகத்தான் நடக்கிறதா? ராணுவ முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்த தமிழர்கள் தங்களுடைய சொந்த இடத்துக்கு முழுமையாகத் திரும்பிவிட்டார்களா?''
50 சதவிகிதத் தமிழர்கள்தான் இது வரை விடுவிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கும் வீடுகள் இன்னும் கட்டித் தரப்படவில்லை. நாலு தகர ஷீட், நான்கு கொம்புகள், நாலு மூட்டை சிமென்ட் இவைதான் கொடுக்கின்றனர்.
இதை வைத்து நாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ள வேண்டும். இலங்கை ராணுவம் இதுவரை 50 வீடுகளைத்தான் தமிழர்களுக்குக் கட்டித் தந்துள்ளது. தமிழர்கள் வசித்த பகுதிகளில், சிங்களர்களும் ராணுவத்தினரும் குடி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ராணுவத்தினர் பல்வேறு தொழில்களைத் தொடங்கிவிட்டனர். சலூன் கடைகூட ராணுவ வீரர்கள்தான் நடத்துகின்றனர். போரில் ஏராளமான குண்டுகள் விழுந்ததால், பல இடங்களில் விவசாயம் செய்யும் தன்மையை நிலம் இழந்துவிட்டது. தமிழர் கள் கூலி வேலைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. அவர்களின் அக வாழ்க்கை மட்டும் அல்ல... புற வாழ்க்கை யும் இருட்டாகத்தான் இருக்கிறது.''
''இப்படிப்பட்ட நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் என்று நம்புகிறீர்களா?''
நிச்சயமாக! இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!''
Tuesday, January 10, 2012
ராஜிவ் கொலை
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்புக்கு அய்யா பழ.நெடுமாறன் தலைமையில் எடுத்த முயற்சிக்கும், இந்த வரலாற்றுச் சாதனைக்கும் நம் வாழ்வு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்ட நிலையில் ராஜீவ்காந்தி படுகொலையில் இன்னும் அவிழாத மர்ம முடிச்சுகள் பற்றி அவர் வழங்கிய சிறப்பு பேட்டி.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை ரத்தாகுமா?
சென்னை உயர்நீதி மன்றத்தில் நாங்கள் வழக்குத் தொடர்ந்திருந்தோம். இந்த மூவரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்து ஏறக்குறைய 11 ஆண்டு காலமாகிவிட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் சில தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தீர்ப்புத் தண்டனை உறுதி செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு காலதாமதமானால் அது நிறைவேற்றப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கின்றது. இவர்கள் விசயத்தில் ஏறக்குறைய 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. தூக்குத் தண்டனை என்பது சில நொடிப்பொழுதில் உயிர் போய்விடும். ஆனால் 11 ஆண்டு காலம் இந்த மூவரும் தூக்கு மரத்தின் நிழலில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் துடிதுடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை. இதற்குமேல் ஒரு தண்டனை என்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
இரண்டாவது, அவர்கள் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயுள் தண்டனை என்றாலும் கூட அது பத்து ஆண்டுகள்தான். இதற்கு மேலும் இன்னொரு தண்டனை என்பது ஒரே குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்றாகிவிடும். ஆகவே இது கூடாது என்பதுதான் எங்கள் வாதம். தற்போது எட்டு வாரத்திற்கு இடைக்காலத் தடை கிடைத்துள்ளது. எட்டு வாரம் கழித்து மீண்டும் விசாரணை நடக்கும்போது அவர்களின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.
கடந்த 11 ஆண்டுகளாக இவர்களின் கருணை மனுவைக் கண்டு கொள்ளாத குடியரசுத் தலைவர் திடீரென்று தள்ளுபடி செய்திருப்பதில் இலங்கையின் குறுக்கீடு எதுவும் இருப்பதாக நம்புகிறீர்களா?
இதில் இலங்கையின் குறுக்கீடு எதுவுமில்லை. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் மரண தண்டனையை ஏன் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டு பி.ஜே.பி. கட்சியின் சார்பில் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபோது, அதன் விளைவாக அதற்கு முன்னால் தூக்குத் தண்டனை பெற்ற அனைவரின் மனுக்களையும் எடுத்து முடிவு செய்ய வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு வந்துவிட்டது. அதன் விளைவாகத்தான் இந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அப்சல் குரு உட்பட அனைவரின் தூக்குத் தண்டனையையும் நாங்கள் ரத்து செய்கிறோம் என்று குடியரசு தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்க வேண்டும். இந்த அரசுக்கு அந்தத் துணிவும் இல்லை. ஏனென்றால் மகாத்மா காந்தியை தேசத் தந்தையாகப் பெற்ற நாடு இந்த நாடு. அவர் ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் இந்தத் தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
ராஜீவ் காந்தி படுகொலையில் உண்மைக் குற்றவாளிகள் உல்லாசமாக உலவுகிறார்கள் என்று கூறப்படுகின்றதே?
ராஜீவ் காந்தி படுகொலைக்கான விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னரே “விடுதலைப் புலிகள்தான் இதைச் செய்தார்கள்’ என்று அறிவித்துவிட்டுத்தான் புலன் விசாரணையைத் தொடங்கினார்கள். அதற்கு ஏற்றவாறு அவர்கள் வழக்கை ஜோடித்தார்கள். இந்தக் கொலை நடந்த மூன்றாம் நாள், விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் எழுத்தாளராக இருந்த கிட்டு இலண்டனிலிருந்து “இந்தக் கொலைக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்றும், “உண்மையான கொலையாளிகள் பற்றி எங்களிடமும் சில தகவல்கள் உள்ளன. இந்திய அரசு என்னை அணுகினால் அவற்றையெல்லாம் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்’ என்றும் பகிரங்கமாகவே அறிக்கை கொடுத்தார். பத்திரிகைகளில் எல்லாம் இது வந்திருக்கின்றது. ஆனாலும் இந்திய அரசு சார்பில் அவரை அணுகவே இல்லை.
இரண்டாவதாக, இந்தக் கொலை குறித்து விசாரணை நடத்துவதற்கு ஓர் உயர் போலிஸ் அதிகாரி இலண்டனுக்குப் போனார். அங்கு சில ஆவணங்கள் அவருக்குக் கிடைத்தன. அவைகளும் பத்திரிக்கையில் வந்தன. ஆனால், இலண்டன் விமான நிலையத்தில் அவர் வைத்திருந்த அந்த ஆவணங்கள் அடங்கிய சூட்கேசை யாரோ திருடிக் கொண்டு போய்விட்டார்கள் என்று அறிவித்துவிட்டார். இது பலமான சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த வழக்கில் 26 பேரில் ஒருவராகக் குற்றம் சாட்டப்பட்ட பெங்களூரைச் சார்ந்த ரெங்கநாத் என்பவர் சிவராஜனுக்கு வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுத்தார் என்பதுதான் அவர் மீதான முதல் குற்றச்சாட்டு, அவரை அழைத்துக்கொண்டு சிவராஜன் டெல்லிக்குப் போயிருக்கிறார். இவரை வெளியே உட்கார வைத்துவிட்டு சந்திராசாமியைப் பார்த்திருக்கிறார். ஒரு தடவை அல்ல. இரண்டு தடவை. உள்ளே சந்திராசாமியுடன் என்ன பேசினார் என்பது எனக்குத் தெரியாது என்றும் ரெங்கநாத் சொல்லியிருக்கிறார்.
ஆனால், சந்திராசாமியைச் சந்தித்தது உண்மை என்று ரெங்கநாத் சொன்னபோது புலன் விசாரணை அதிகாரிகள் அதனைப் பதிவு செய்யாமல் அவரை சித்திரவதை செய்தார்கள். “இதை நீ வெளியே சொன்னால் உன் உயிர் போய்விடும்’ என்று அவரை அடக்கிவிட்டார்கள். பின்னர் அதை அவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வாக்குமூலமாக தாக்கல் செய்தார். ஆனால் இன்று வரை சந்திராசாமியை விசாரிக்கவே இல்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவர்மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டபோது குறைந்தபட்சம் அவர் விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் இதில் தொடர்புடையவர்கள் என ஒருவர் அல்ல, பல பேர் குற்றம் சாற்றி விட்டார்கள். ஆனால் இதுவரை நடக்கவில்லை. சந்திராசாமியின் சீடர்தான் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், ஆகையால் ராஜீவ் கொலையால் ஆதாயம் அடையக்கூடியவர்கள் யாரோ, அவர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும். அப்படியானால் ஆதாயம் அடைந்தது யார்? இந்தக் கோணத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் விசாரிக்கவே மறுத்துவிட்டார்கள். ராஜீவ் கொலை யால் உடனடியாக ஆதாயம் அடைந்தவர் பி.வி. நரசிம்மராவ். இவர் பிரதமரான பிறகு சந்திராசாமி சம்பந்தமான கோப்புகள் திடீரென்று மாயமாகிவிட்டன. அந்தக் கோப்புகள் எங்கே போய்விட்டன என்று இதுவரைக்கும் விசாரிக்கவில்லை.
ஜெயின் கமிஷன் அறிக்கை அமைக்கப்பட்டதன் நோக்கம்தான் என்ன?
ராஜீவ் கொலையில் சில மர்ம முடிச்சுகள் உள்ளன. அதை அவிழ்ப்பதற்காகத்தான் ஜெயின் கமிசன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிசன் தனது விசாரணையின் முடிவில், இன்னும் சில பேரை சி.பி.ஐ. விசாரிக்கத் தவறிவிட்டது என்றும், எல்லோரையும் இதில் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. ஜெயின் கமிசனின் ஆணைக்கிணங்க ஒரு சிறப்பு புலன் விசாரணைக்குழு இந்திய அரசினால் அமைக்கப்பட்டது. அந்த விசாரணைக் குழு இந்தப் படுகொலை நடந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் விசாரணையை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதையும் எங்கள் வாதத்தில் கேட்கிறோம். சிறப்புப் புலன் விசாரணைக் குழுவில் வேறு யாரோ சிலர் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்டால், இந்த மூவரையும் தூக்கில் போட்டுவிட்ட நிலையில் இவர்களின் உயிரைத் திருப்பித் தர முடியுமா? எனவே, அந்த விசாரணைக் குழு முடிவு வெளிவரும்வரை இதனை நிறுத்தி வையுங்கள் என்று நாங்கள் வாதாடி வருகிறோம்.
ராஜீவ் காந்தியின் கொலையில் அந்நிய சக்திகளின் தலையீடு உள்ளது என்று நம்பலாமா?
நிச்சயமாக உள்ளது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அராபத் ராஜீவ் காந்திக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இந்தியாவிற்கு வந்தபோது டெல்லி பத்திரிகையாளர்களிடத்தில் “சில அந்நிய சக்திகள் உங்களை ஒழித்துக்கட்ட திட்டமிட்டுள்ளதால் நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் என்று நான் பத்து பதினைந்து நாட்களுக்கு முன்பே ராஜீவ் காந்தியை எச்சரித்தேன். ஆனால், என்னுடைய எச்சரிக்கையை அவர் கவனத்தில் எடுக்காமல் போனதால்தான் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது’ என்ற உண்மையைச் சொன்னார். இப்படிச் சொன்ன யாசர் அராபாத் பெரிய தலைவர் மட்டுமன்றி ஒரு நாட்டின் அதிபர். சி.பி.ஐ. அவரைச் சந்தித்து அந்த அந்நிய சக்திகள் யார் என்பதை விசாரித்திருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் அதை செய்ய தவறிவிட்டனர்.
இன்னொன்று, பிரேமதாசா மேல் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். பிரேமதாசா குடியரசுத் தலைவராக வந்தபின் இந்திய அமைதிப் படையைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ராஜீவ் காந்தி அதனை ஏற்கவில்லை. ஆகவே இந்த இரண்டு பேருக்கும் ஓர் உரசல் இருந்தது. ஒருவேளை ராஜீவ் காந்தி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகிவிட்டால் அவர் இந்திய அமைதிப் படையை ஒருபோதும் திரும்பப் பெறமாட்டார். நமக்குத் தொந்தரவு கொடுப்பார் என்ற அச்சத்தின் விளைவாக ராஜீவ் படுகொலை நிகழ்ந்திருக்குமோ என்ற சந்தேகமும் இந்தக் கொலைக்குப் பின்னால் இருக்கிறது. ஆகவே, இதனை எல்லாம் தீர்க்கமாக விசாரிக்க வேண்டியது புலன் விசாரணைக் குழுவின் கடமை. ஆனால் இதையெல்லாம் அவர்கள் விசாரிக்கவே இல்லை. ராஜீவ் கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டார். அப்படியானால் பிரேமதாசாவின் படுகொலையில் இந்திய உளவுத்துறையின் கை இருக்கிறது என்ற சந்தேகமும் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் விசாரிக்காமல் திரும்பத் திரும்ப விடுதலைப் புலிகள் மேல்தான் பழி சுமத்தப்படுகிறது.
இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்பு ஏற்பட்ட சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின்போது, “ஒரு பெரிய மரம் வீழ்கின்றபோது அதைச் சுற்றியுள்ள நிலம் அதிர்வது இயற்கையே’ என்று ராஜீவ் காந்தி கருத்து சொன்னார். இம்மாதிரியான மனநிலையில்தான் ஈழத் தமிழர் படுகொலை விசயத்திலும் காங்கிரசார் நடந்து கொள்கிறார்களா?
காங்கிரசாரைப் பொறுத்தமட்டில் உண்மையை அறிந்து கொள்வதைவிட பக்தி விசுவாசத்தைக் காட்டுவதுதான் அவர்களுக்கு மிக முக்கியம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மீது தங்கள் விசுவாசத்தைக் காட்டிக் கொள்வதற்காக அவர்கள் எதையாவது பேசுவார்கள். ராஜீவ் காந்தி கொலை இருக்கட்டும். அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம். ஆனால், இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி 7000 அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்தது பற்றி இந்தக் காங்கிரஸ்காரர்கள் யாராவது கவலைப்படுகிறார்களா? நிச்சயம் கவலைப்பட மாட்டார்கள். மேலும் இந்தப் படுகொலை விசயம் இவர்களுக்குத் தெரிந்திருக்குமா என்பதும் சந்தேகமே! குதிரைக்குக் கடிவாளம் போட்டது போன்று அவர்கள் இரு விழிகளையும் மூடிக்கொண்டு, உண்மையைப் பார்க்கவோ அல்லது அது பற்றி தெரிந்து கொள்ளவோ மறுக்கிறார்கள்.
தீர்ப்பு நாளில் உயர் நீதிமன்ற வளாகமே உணர்ச்சியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. இந்த உயிர் காக்கும் போராட்டத்தில் தமிழக மக்களின், தமிழக உணர்வாளர்களின் எழுச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இருபது ஆண்டு காலமாக இந்த வழக்கைப் பற்றி வெளியான பல தகவல்கள் தமிழக மக்களை உண்மையை தெரிந்து கொள்ள வைத்திருக்கின்றன. நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் இவர்கள் அநியாயமாகத் தூக்கிலிட முயற்சிக்கிறார்கள் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் இப்படிப்பட்டதொரு எழுச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கொலை வழக்கில் சென்னை தடா நீதிமன்றம் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. உலகத்திலேயே ஒரு கொலைக்கு 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்த சம்பவம் இது ஒன்றுதான். வேறு எந்த வழக்கிலும் இது செய்யப்படவில்லை. உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் இந்த வழக்கை எடுத்துச் சென்றதன் விளைவாக 19 பேர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப்பட்டார்கள். 3 பேருக்கு ஆயுள் தண்டனை. ஆக மொத்தம் 22 உயிர்களை நாங்கள் காப்பாற்றி இருக்கிறோம்.
நாங்கள் இப்போது கேட்கிற கேள்வி, சென்னையிலுள்ள தடா நீதிமன்றத்தில், 22 ஆண்டுகளாக என்னென்ன சாட்சியங்கள், வாதங்கள் வைக்கப்பட்டனவோ அதை வைத்துதான் 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே வாதங்களையும், சாட்சியங்களையும், ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துத்தானே 19 பேரையும் விடுதலை செய்தது. அப்படியென்றால் நீதியில் ஏதோ கோளாறு இருப்பதாகத்தானே இதற்கு அர்த்தம்? அது எப்படி நடக்கிறது? அவர்களுக்காக நாங்கள் வழக்கு நடத்துவதற்கு நிதி திரட்டி இந்த வழக்கை நடத்தியதால் 22 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. வழக்கு நடத்த முடியாமல் போயிருந்தால் அநியாயமாக இந்த 22 உயிர்களும் பறிக்கப்பட்டிருந்திருக்கும். ஆகவே, நீதி என்பது ஏழைகளுக்கு அல்ல, வசதி படைத்தவர்களுக்கும், உயர் சாதிக்காரர்களுக்கும்தான் என்றாகிவிட்டது.
இந்த விசயத்தில் பல நாட்களாய் மெளனம் சாதித்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு குற்றவாளிகளுக்குத்தான் சாதகமாய் அமையும் என்பதை யூகித்துதான் முதல்வர் கடைசி நிமிடத்தில் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் என்றும் சொல்லப்படுகிறதே!
என்ன காரணத்திற்காக நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க, வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்மானம். இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன்.
இவர்கள் மூவரின் உயிர் காக்கும் விசயத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனரே. இதில் யார் சொல்வது உண்மை?
இந்த விசயம் மட்டுமல்ல, எந்தவொரு விசயமாக இருந்தாலும் இந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எதிரும் புதிருமாக நிலைப்பாடு எடுத்து மோதிக்கொள்வதையே அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
கருணாநிதி நினைத்திருந்தால் இவர்கள் மூவரின் உயிரையும் காப்பாற்ற முயற்சித்திருக்கலாம் என்று ஜெயலலிதா கூறுகிறாரே? அது உண்மையா?
உண்மைதான். ஏனென்றால், அப்பொழுது தமிழக ஆளுநராக இருந்த செல்வி பாத்திமா பீவீயிடம் நாங்கள் கருணை மனு கொடுத்தோம். அவர் அதை ரத்து செய்துவிட்டார். நான் உடனே வி.ஆர். கிருஷ்ண அய்யரைத் தொடர்பு கொண்டு “இந்த மாதிரி ஆகிவிட்டதே! என்ன செய்யலாம்?’ என்று கேட்டபோது, “உயர்நீதி மன்றத்தில் உடனே வழக்குப் போடுங்கள்’ என்று சொன்னார். இன்று நீதியரசராக இருக்கக்கூடிய சந்துருதான் அன்று எங்கள் வழக்கறிஞராக வாதாடினார். ஆளுநராக இருந்தாலும், குடியரசுத் தலைவராக இருந்தாலும் மரண தண்டனையைப் பொறுத்தவரையிலே அல்லது எந்தத் தண்டனையாக இருந்தாலும் மாற்றுதலுக்கான அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட அமைச்சரவை என்ன பரிந்துரை செய்கிறதோ அதை ஏற்றுச் செயல்பட வேண்டியவர்கள்தாம் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும்.
எனவே, ஆளுநர் போட்ட உத்தரவு செல்லாது என்பதுதான் எங்களுடைய வாதம். அதை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டு ஆளுநரின் உத்தரவை செல்லாததாக்கிவிட்டது. ஆகவே, அந்த நான்கு பேரின் கருணை மனுவை மீண்டும் முடிவு செய்கிற அதிகாரத்தை உயர் நீதிமன்றம் மூலம் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்குப் பெற்றுக் கொடுத்தோம். இந்தியாவிலேயே இது முதல் தீர்ப்பு. அது மட்டுமன்றி, இந்த நால்வருக்கும் இரக்கம் காட்டுங்கள் என்று 25,00,000 பேரிடம் கையெழுத்துப் பெற்று 50,000 மக்களைத் திரட்டி என் தலைமையில் ஊர்வலமாகச் சென்றுதான் இதனை கொடுத்தோம்.
இதைச் செய்கிறேன் என்று சொன்ன கருணாநிதி செய்யவில்லை. ஆனால், நளினிக்கு இரக்கம் காட்டும்படி சோனியா காந்தி கடிதம் எழுதியதால் நளினிக்கு மட்டும் செய்தார். அன்றைக்கே இவர் அந்த நால்வருக்கும் செய்திருந்தால் பிரச்சினையே கிடையாது. இந்தச் சிக்கலும் வந்திருக்காது. ஆனால் கருணாநிதி அப்போது அதைச் செய்யவில்லை.
இந்த விசயத்தில் முதல்வரால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெயலலிதா தொடக்கத்தில் ஏன் கைவிரித்தார்?
அந்த அம்மையாருக்கு அதிகாரிகள் சரியாக வழிகாட்டவில்லை. அரசியல் சட்டத்தின் 72வது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. அதே அரசியல் சட்டத்தில் 9வது பிரிவில் ஆளுநருக்கும் அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது இறைமையுடைய அதிகாரம். அதில் யாரும் தலையிட முடியாது. மத்திய உள்துறை செயலாளர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். அதில் குடியரசுத் தலைவர் ஒரு முடிவு செய்துவிட்டால் அதை மாற்றும் அதிகாரம் ஆளுநருக்குக் கிடையாது என்று வாதிடுகிறார்கள். ஆளுநருக்கு உள்ள அதிகாரம் என்பது நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் டர்ஜ்ங்ழ். உள்துறை செயலாளருக்கு உள்ள அதிகாரம் என்பது ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங் டர்ஜ்ங்ழ். இந்த இரண்டில் எவராலும் மாற்றப்பட முடியாத நர்ஸ்ங்ழ்ங்ண்ஞ்ய் டர்ஜ்ங்ழ், (இறைமையுடைய) அதிகாரம் தான் உயர்ந்தது. ஆளுநரே நினைத்தாலும் இதனை மாற்ற முடியாது. காரணம் இது அரசியல் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டடிருக்கின்ற அதிகாரம். ஊஷ்ங்cன்ற்ண்ஸ்ங் டர்ஜ்ங்ழ்யைப் பொறுத்தளவில் மாற்றப்படக் கூடியது. இன்னொரு உள்துறை செயலர் வந்தால் இதனை மாற்றிக் கொள்ளலாம். ஆக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இவர்கள் சரியான தகவலைக் கொடுக்கவில்லை என்பதுதான் என் கருத்து.
மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. ஆனால் குற்றம் செய்பவர்களுக்கு இது சாதகமாய் அமைந்துவிடும் என்ற எதிர்வாதமும் வைக்கப்படுகின்றதே! இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது ஒரு தவறான கருத்து. 147 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென்று ஐ.நா.வும். தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளிலெல்லாம் குற்றங்கள் அதிகமாகிவிட்டனவா? இல்லையே! ஆனால் மரண தண்டனை இருக்கின்ற இந்தியாவில்தான் கொலைக் குற்றங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆக, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் குற்றங்கள் குறையும் என்று எதிர்பார்த்ததால் அது தவறு. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனால் இந்திரா காந்தியைக் கொல்ல தயங்கினார்களா என்ன? அதை நம்மால் தடுக்க முடிந்ததா? இல்லையே! இவைகள் வெவ்வேறு காரணங்களினால் நிகழ்கின்றன. அநேகமாக எல்லா ஐரோப்பிய நாடுகளும் மரண தண்டனையை ஒழித்துவிட்டன.
இயேசு பிரான் பாதையை உண்மையாக அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், மகாவீரர், புத்தர், காந்தி ஆகிய மகான்கள் வாழ்ந்த இந்தியாவில் இதுமாதிரியெல்லாம் பேசுவது மிகவும் தவறு. ஆகவே, குற்றங்களுக்குக் காரணமாக அமைகின்ற சமுதாயத்தின் சூழல்களை மாற்றினாலே குற்றங்கள் குறைந்துவிடும்.
நன்றி : -நம்வாழ்வு-