Kadhai Alla Nijam

Monday, August 15, 2011

ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்து’ ராம்






ராஜபக்சேயின் புரோக்கர் - ‘இந்துராம்

இந்துநாளேட்டின் ஆசிரியரான ார்ப்பன ராம், சீனாவுக்கும் இலங்கைக்கும் தரகராகசெயல்பட்டுவரும்நபர். ஈழத் தமிழர் மீது ஜெயவர்த்தனா நடத்திய இனப் படுகொலைகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன்போன்ற நாடுகளும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வெளியிட்டு வரும் கருத்துகளை தனதுஏட்டில் முழுமையாக இருட்டடித்து விடுவார்இந்துராம்! அண்மையில் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிவரும்சேனல்-4’ தொலைக்காட்சி ஈழத்தின்கொலைக் களங்கள்பற்றி வெளியிட்ட அதிர்ச்சியூட்டும்காட்சிகள் உலகத்தின் மனசாட்சியையே லுக்கி விட்டுள்ளது. ஆனாலும் அப்படிசேனல்-4’ஒளிபரப்பிய கொலைக்கள காட்சி பற்றிய செய்தியை ராம் பார்ப்பான், இருட்டடித்து விட்டார்.இவ்வளவுக் கும் பிறகு ராஜபக்சே மீது உலக அளவில் உருவாகி வரும் எதிர்ப்புகளிலிருந்து பாது காத்து,அவரை கதாநாயகனாக்கிக் காட்டும் முயற்சியில்இந்துராம் இறங்கி யுள்ளார். அவசர அவசரமாககொழும்புக்குப் பறந்து போய் ராஜபக்சேவை நேரில் சந்தித்து வரது விசேட பேட்டியை வாங்கி, கடந்தஜூலை 23 ஆம் தேதி தனது ஏட்டின் முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளார்.ராஜபக்சே சிரித்துக் கொண்டு காட்சியளிக்கும் பெரிய படத்துடன் தன்னுடைய பெயரிலேயே - ராம்,அந்தப் பேட்டியை வெளியிட்டுள்ளார். ராஜபக்சே தமிழர் பிரச்சினை களுக்கு அரசியல் தீர்வுகளைஉருவாக்கி வருவதாக அந்த பேட்டி கூறுகிறது. ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி,தலையில் சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகளைசேனல் 4’ தொலைக்காட்சி ஒளிபரப்பியதுகுறித்தும் ராஜபக்சேவிடம்ராம்விளக்கம் கேட்டு வெளியிட்டுள்ளார்.

அய்.நா.வின் ஆவணங்களை சரிபார்க்கும் சிறப்புப் பிரிவின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அதுஉண்மையான படம் தான் என்று சான்றளிக்கப்பட்ட அந்தக் காட்சிகளை டப்ளின் தீர்ப்பாயம் அங்கீகரித்தஅந்த காட்சிகளை, பொய்யான படம் என்று ராஜபக்சே கூறுகிறார். அந்தப் டத்தில் துப்பாக்கியால்சுடுவது விடுதலைப்புலிகள் என்றும், நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லப்படுவது சிங்கள ராணுவத்தினர்என்றும் ராஜபக்சே கேவலமாகபுளுகுவதைமான வெட்க மின்றிபத்திரிகை தர்மம்பேசும், ‘இந்துராம்வெளியிட்டுள்ளார். ராஜபக்சேயும் அவரதுதாசர்இந்து ராமும் கூறும் பொய்யை சிங்களர்கள்கூடநம்பத் தயாராக இல்லை.

இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவேஇந்துராமின் பார்ப்பன பொய்க்குசெருப்படிதந்திருக்கிறார். மறைந்த முன்னாள் நீதிபதி ஆனந்த பால கிருஷ்ணரின் நினைவுப் பேருரையைசந்திரிகா கொழும்பில் ஆற்றியபோது, ‘இலங்கையின் கொலைக்களம்வீடியோ காட்சி பற்றிக்கூறுகையில் கண் கலங்கி யிருக்கிறார். “இந்த வீடியோ காட்சியை பிரிட்டன் தொலைக்காட்சியில்பார்த்த எனது 28 வயதான மகன், ‘நான் சிங்களவன் என்று கூறுவதற்கே வெட்கப்படுகிறேன், அம்மாஎன்று என்னிடம் அழுதுக் கொண்டே கூறினான். என்னுடய மகளும் அவ்வாறே கூறினாள்என்று கூறியசந்திரிகா, அந்தக் கூட்டத்தில் கண்கலங்கி, நாதழுதழுத்து, சற்று நேரம் பேச முடியாமல்அமைதியாகிவிட்டார் - என்று ஏடுகளில் செய்திகள் (ூலை 25) வெளிவந்துள்ளன.

பத்திரிகை தர்மம்பேசுகிற பார்ப்பனர் ராம், வழக்கம்போல் இந் செய்தியை யும், தனது ஏட்டில்ருட்டடிப்பு செய்து விட்டார். லகம் முழுதும் இனப்படு கொலைக்கும், இனவெறிக்கும் இராணுவஅடக்குமுறைக்கும் எதிராக எழுதி - ஏதோ, மனித உரிமைக் காவலன் போல் - இடதுசாரி முகமூடிபோட்டுக் கொள்ளும், இந்தப் பார்ப்பனருக்கு ஈழத் தமிழன் என்றால், விடுதலைப்புலிகள இயக்கம்என்றால்பூணூல்’, ‘பஞ்ச கச்சஉணர்வுகள் வெளியே ிழித்துக் கொண்டு வந்து நிற்கின்றன; அவ்வளவுபார்ப்பனத் திமிர்!

Friday, July 29, 2011

தனி ஈழம் ஒன்றே தீர்வு: லயோலா கல்லூரி நடத்திய ஆய்வில் 64 சதவீதம் பேர் கருத்து




சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கச்சத்தீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். 81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் ராஜபக்சே போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Thursday, July 28, 2011

தமிழீழம் அமைய, பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ




புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

இலங்கையில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகமாகம் வடக்கு கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றியுள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.

தனித் தமிழீழமே தீர்வு என்று, 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா அவர்கள் நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர்.

அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழீழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழீழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.

எரித்திரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில் தனிநாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழீழத்தை அமைப்பதற்காக, தமிழீழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழீழ ஆதரவு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழீழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும். அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள ஈழத் தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்ச மற்றும் அவரது கூட்டாளிகளை, உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் போர்க் குற்றங்கள்: மகிந்தவை கைதுசெய்யக் கோரி ஆந்திரவில் ஆர்ப்பாட்டம்



இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்காக இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும், அதற்குத் துணைபோன ஏனையவர்களையும் கைது செய்யுமாறு கோரி தென்னிந்திய மாநிலமான ஆந்திராவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.


ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் பகுதியிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாகக் கூடிய நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெருந்தொகையான பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டிருந்தார்கள்.


இலங்கையின் ஆடிக்கலவரம் இடம்பெற்ற கறுப்பு ஜுலையை முன்னிட்டு போர்க் குற்றங்களுக்கும் இனப்படுகொலைகளுக்கும் எதிரான இயக்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.


கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு தமிழர்களுக்கு நீதிவழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கர்னாடக மாநிலத்திலும், ஆந்திராவிலும் தொடர்ச்சியாகப் பொதுக் கூட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

Sunday, July 3, 2011

கரும்புலிகள் நாள் – 2011




காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது; தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம் – தமிழீழ விடுதலைப் புலிகள்
இவ் விடயம் 03. 07. 2011, (திங்கள்),தமிழீழ நேரம் 21:21க்கு பதிவு செய்யப்பட்டது

கரும்புலிகள் நாளை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை.
நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம் ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.
அறிக்கையின் முழு வடிவம்:

தலைமைச் செயலகம்,



ஊ/அ/05/11தமிழீழ விடுதலைப் புலிகள்,



தமிழீழம்.
03/07/ 2011.
கரும்புலிகள் நாள் – 2011
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ்பேசும் மக்களே,
ஜூலை- 05 கரும்புலிகள் நாள்.
எம் மக்களை அழித்து எம் மண்ணை ஆக்கிரமிக்க பெரும் படைப்பலத் துணையுடன் வந்த எதிரியை எதிர்கொள்ள தம் உயிரையே ஆயுதமாக்கி, உடலை வெடிமருந்தாக்கி மனபலத்தை எமது இனத்தின் கவசமாக்கிய உத்தமர்களின் நினைவு நாள்.
கரும்புலிகள் காலத்தால் மறைந்து போகாத வரலாற்றைப் பதித்து, இரும்பையொத்த வீரத்தை விதைத்து, எம்மினத்தின் வரலாற்றைப் புதுப்பித்த புனிதர்கள்.
ஜனநாயகம் என்கின்ற போர்வையில் அரச பயங்கரவாத ஆட்சியாளர்களால் ஆயுத பலத்துடன் தமிழினம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட, மனித நாகரீகமே வெறுக்கத்தக்க தமிழர் படுகொலைகளுக்கும் நில ஆக்கிரமிப்புக்கும் எதிரான எமது போராட்டத்தின் அதியுச்ச எதிர்ப்பு ஆயுதமாகவே எமது தற்கொடையாளர்கள் களமிறங்கினார்கள்.
எமது போராளிகள் தங்களைத் தற்கொடையாளர்களாக அர்ப்பணித்ததன் பின்னணி, சூழல் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்காமலும் அவர்களின் ஆத்ம உணர்வுகளின் ஆணிவேரைப் புரிந்துகொள்ளாமலும் எமது இனவிடுதலை தொடர்பான எந்த ஆய்வுகளும் நிறைவடைய முடியாது. எம் இன விடுதலைக்கான தேவையினையும் அவசியத்தினையுமே கரும்புலிகளின் உணர்வுகள் பதிவு செய்துள்ளன.
இன்று தமிழர் தாயகத்தில் எமது மக்கள் தொடர்ந்தும் அவலங்களை எதிர்கொண்டே வாழ்கின்றனர். எமது மக்கள் தமது பூர்வீகமமான வாழிடங்களில் ஆயுதம் தரித்த சிங்களப்படைகளின் அச்சுறுத்தலின் மத்தியில் அடிமைகளாகவே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். காலங்காலமாகச் சிறுகச்சிறுக தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து ஏப்பம் விட்ட சிங்கள அரசு இப்போது தனது ஆக்கிரமிப்பை எந்தத் தடைகளுமற்று பெருமெடுப்பில் சிங்கள பெளத்த மயமாக மாற்றிவருகின்றது.
போர் முடிந்துவிட்டதாகக் கூறும் சிங்கள அரசு இன்னமும் தமிழர் தாயகத்தைப் போர்ச்சூழலிலேயே வைத்திருக்கின்றது. தினமும் கொலைகள், அச்சுறுத்தல்கள், காணாமற்போதல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.
பெயரளவிற்கு விடுவிக்கப்பட்டதாகக் கூறும் எமது ஆண், பெண் போராளிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதும் காணாமற் போவதும் படுகொலை செய்யப்படுவதும் நாளாந்தம் நிகழ்ந்தேறி வருகின்றன.
தமிழர்களால் ஜனநாயகரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மக்கள் சந்திப்புக்களிற்கூட சிங்களக் கூலிப்படைகளின் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. இந்நிலைதான் கடந்த பல தசாப்தங்களாக சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
சிங்கள ஆட்சியாளர்களின் இத்தகைய நடவடிக்கைகளானது உலக நாகரிகங்களையும் மனிதவிழுமியங்களையும் தொடர்ச்சியாக அவமதிக்கும் செயலாகவே பார்க்க முடிகின்றது. மேலும் மனித உரிமை தொடர்பில் அனைத்துலகத்தின் அழுத்தங்களை சிங்களம் செவிமடுக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. காலங்காலமாக தமிழர்மேல் அடக்குமுறைகளை ஏவியே வளர்ந்துவந்த இப்பேரினவாத அரசு இன்றைய நிலையில் மென்மேலும் மோசமான நிலையை நோக்கியே நகர்ந்து செல்கின்றது.
சிங்கள அரசின் இத்தகைய தொடர் செயற்பாடுகளால் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் எமது மக்களின் சுதந்திர உணர்வை அழித்துவிட முடியாது. தொடர் ஆக்கிரமிப்புக்களால் சிங்கள பௌத்த பேரினவாத அரசிடமிருந்து எமது மக்கள் விடுதலை பெற வேண்டிய தேவை இன்னுமின்னும் வலுவடைந்து கொண்டே வருகின்றது.
எமது போராட்டம் ஆயுதவழியில் ஆசை கொண்டோ வெடிமருந்தில் மோகம் கொண்டோ முகிழவில்லை. மாறாக சாத்வீக வழியிலான எல்லாப் பொறிமுறைகளும் தோற்றுப்போன பின்பே ஆயுதப்போராட்டம் உருவானது. இன்றைய உலக ஒழுங்கு எமது விடுதலைப்பயணத்திற்கான ஆயுதப்போராட்டம் எனும் பாதையினை ஏற்றுக்கொள்ள மறுத்து வந்ததோடு தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நின்ற எமது இயக்கத்தை அழித்துவிடும் கொடிய போர் குறித்து பாராமுகமாக இருந்ததையும் சில நாடுகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் எமது இனம் வேதனையுடன் பார்க்கின்றது.
நாம் எமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்த நாளிலிருந்து எமது மக்கள் தமது உரிமைக்கான போராட்டத்தினை மாற்று வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்கள். அதேவேளை எமது மக்களோடு சேர்ந்து, எமது இனத்தின் மீதான உரிமை மீறல்களைப் புரிந்துகொண்டு, அதற்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்க அக்கறை செலுத்துகின்ற நாடுகளுக்கும் அமைப்புக்களுக்கும் நாம் ஒத்துழைப்புக்களைத் தொடர்ந்து வழங்கத் தயாராகவேயுள்ளோம்.
எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை அனைத்துலக அரசியல் நகர்வுகளுக்கு ஏற்ப எமது மக்களை அணிதிரட்டி நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதற்கான ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் சர்வதேசத்திடம் வேண்டி நிற்கின்றோம்.
காலத்தின் கட்டாயம் தான் கரும்புலிகளை உருவாக்கியது. தரையில் எதிரிகளின் இரும்பு கோட்டைகளை ஊடறுத்துத் தகர்த்தார்கள்; கடலில் எதிரிக்கலங்களை மூழ்கடித்தார்கள்; வான்வழி சென்று வரலாறு படைத்தார்கள். தமிழர் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற எம் காவிய நாயகர்கள் என்றும் எம்மினத்தின் காவல் தெய்வங்களாய் நிலைப்பார்கள்.
தியாகங்களின் உச்சத்தைத் தொட்ட எமது தற்கொடையாளர்களின் கனவை நாம் என்றென்றும் நெஞ்சில் நிறுத்திப் பூசிப்போம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

Friday, June 24, 2011

ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர் பழ. நெடுமாறன் அழைப்பு


ஜூன் 26 கடற்கரையில் திரளுவீர்
பழ. நெடுமாறன் அழைப்பு
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாகி உயிர்நீத்த ஈழத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் நினைவேந்தல் செலுத்தும் வகையில் சென்னைக் கடற்கரையில் ஜூன் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு மெழுகுதிரி ஏந்தி நிற்கும் நிகழ்ச்சியை மே 17 இயக்கம் முன்னின்று நடத்துகிறது.
ஐ.நா. மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்துலக நாள் அன்று இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பது சிறப்புக்குரியது. இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் பங்கெடுத்து நமது உணர்வை வெளிப்படுத்தத் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இதுவரை வெளிவராத தகவல்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை

இதுவரை வெளிவராத தகவல்கள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

‘‘1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே... தெரியுமே..’’ என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

‘‘நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

‘‘இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

‘என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

‘‘அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

‘‘ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

‘சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

‘மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.

எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.’’

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

‘‘அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!’

Sunday, November 7, 2010

தமிழ் ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் கருணாநிதி! – நெடுமாறன்

சகோதர யுத்தமே ஈழப் போராட்டத்துக்கும் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம் என்று முதல்வர் கருணாநிதி கடந்த சில அறிக்கையில் தொடர்ந்து கூறி வருகிறார்.

இத்தனை நாளும் இதற்கு பதில் தராமலிருந்த, ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், இப்போது ஈழப் போராளிகள் விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்துகொண்டார் என்பதை மேடைகளில் வெளியிட்டு வருகிறார்கள்.

ஈழப் போராளி குட்டிமணியை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்தவரே கருணாநிதிதான் என்றும், தன்னை விட பிரபாகரனையே ஈழத் தமிழர்கள் மதித்ததால், கருணாநிதி எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார் என்றும் பழ நெடுமாறன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன் இப்படிப் பேசினார்:

“கருணாநிதி ஈழப்போராட்டத்திற்குச் செய்த துரோகங்கள் குறித்து இதுவரை நான் பேசாத பல விஷயங்களை இன்று பேசப்போகிறேன்.

1985-ம் ஆண்டு கருணாநிதியின் பிறந்தநாளுக்குக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை போராளி இயக்கங்களுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். இந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு விளம்பரம் தேடிக் கொள்வார் என்பதால் புலிகள் பணம் வாங்கச் செல்லவில்லை. உடனே எரிச்சலடைந்த கருணாநிதி, “என் பணத்தை அவர்கள் வாங்க மாட்டார்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில்தான் எந்த விளம்பரமும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வாரிக் கொடுத்துக் கொண்டிருந்தார். தன் சொந்தப் பணத்தையே அள்ளிக் கொடுத்தார் அவர்.

இருந்தாலும் புலிகளில் சில தம்பிகளுக்கு கருணாநிதி மேல் நம்பிக்கை இருந்ததால் அவரைச் சந்தித்து பணம் கேட்கலாம் என்று பிரபாகரனிடம் வற்புறுத்தினர். சரி, அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவாவது, போய் கேட்டுப் பாருங்கள் என நான் சொன்ன ஏற்பாட்டின்படி, 26.1.85 அன்று கருணாநிதியைச் சந்தித்தனர்.

அவரிடம் டஎங்களுக்குப் பத்து கோடி ரூபாய் வேண்டும்’ என்று கேட்டுள்ளனர். அவர்களை அனுப்பிவிட்டு என்னைத் தொடர்பு கொண்ட கருணாநிதி, ‘என்ன இவ்வளவு பணம் கேட்கிறார்கள்’ என்றார் பெரும் அதிர்ச்சியுடன். பின்னர் புலிகள் அமைப்பினரைச் சந்திக்கும்போது ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் அவரிடம் அனுப்பினேன்’ என்று கூறினேன்.

5.6.86-ம் ஆண்டு தி.மு.க கூட்டம் சென்னை கடற்கரையில் நடந்தது. கடற்கரை மணலில் யாரோ குண்டை செருகி வைத்திருந்தார்கள். அந்தப் பழியை தி.மு.க தலைமை புலிகள் மீது போட்டது. நான் பாலசிங்கத்தையும்,பேபியையும் அனுப்பி உண்மையைச் சொல்ல வைத்தேன். பிறகு குண்டு வைத்தது ‘டெலோ’ அமைப்புதான் எனக் கண்டுபிடித்தனர்.

மீண்டும் கருணாநிதியை நாங்கள் சந்தித்தபோது, ‘பிரபாகரன் என்னை மதிக்கவில்லை. பிரபாகரனா? மக்களா? என்றால் இரண்டும் ஒன்றுதான். அந்த மக்கள் பிரபாகரனைத்தான் தலைவனாக நினைக்கிறார்கள்.அவர்களுக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன்,’ என்றார்.

இந்தியா,-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் தமிழர் விடுதலை முன்னணியின் அமிர்தலிங்கம் உடன்பாட்டை ஆதரித்துப் பேசினார். நான் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது,’மத்திய உளவுப்பிரிவின் நெருக்குதலில்தான் நான் இந்த அறிக்கையைக் கொடுத்தேன். அப்போது ‘என் அறிக்கையைக் கண்டித்து கருணாநிதி பதில் அறிக்கை கொடுத்தால் என்ன செய்வது?’ என்று உளவுத் துறையினரிடம் கேட்டேன். ‘அவர் அப்படியெல்லாம் அறிக்கை கொடுக்க மாட்டார்’ என்று உளவுப்பிரிவினர் என்னிடம் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியேதான் கருணாநிதியும் நடந்து கொண்டார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

அதற்கு பின் கருணாநிதியை அமிர்தலிங்கம் சந்தித்தபோது, ‘நேற்று பிறந்த பயல் (பிரபாகரன்) அவன். இரண்டே நாளில் இந்திய ராணுவம் அவனது கொட்டத்தை அடக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். இது உண்மையா? இல்லையா? இதை கருணாநிதி மறுப்பாரா?

1987-ம் ஆண்டு ஜூலை மாதம் போடப்பட்ட ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் பற்றி ஒரு வார்த்தை கூட இன்றுவரை கருணாநிதி பேசியதில்லை. உடன்பாட்டைத் தொடர்ந்து குமரப்பா உள்பட 12 பேர் உயிர்த்தியாகம் செய்தார்கள். இதைக் கண்டித்து அனைத்துக் கட்சித்தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.

ஆனால் நியூயார்க் மருத்துவமனையில், உடல் நலம் குன்றிய நிலையிலும் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியிட்டார். நாங்கள் நடத்திய பந்திற்கு அன்றைய அமைச்சர் பொன்னையனையே அனுப்பி வைத்தார். ஆனால் கருணாநிதி வாயே திறக்கவில்லை.

இவற்றையெல்லாம் விட மிக மோசம், கருணாநிதி செய்த இன்னொரு செயல்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதாவது 1973-ம் வருடம் தமிழ்நாட்டில் இருந்து ஜெலட்டின் குச்சிகளை எடுத்துச் செல்லும்போது குட்டிமணியை போலீஸார் பிடித்தார்கள். அவரை சிங்களப் படையிடம் கருணாநிதிதான் ஒப்படைத்தார்.

குட்டிமணி உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று உணர்ந்து 1983-ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தபோது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி ஒப்புக்கொண்டார். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வர். மகிழ்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து பேச எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது அவர், ‘உங்களுக்கு கருணாநிதியைப் பற்றித் தெரியாது. அவர் இந்த விவகாரம் பற்றி ஏதாவது பேசினால் நான் இந்தக் கோப்பை வாசிப்பேன்’, என்று கூறி அந்த ரகசியங்களை எங்களிடம் காட்டினார்.

அந்தத் தாள்களில் குட்டிமணியை ஒப்படைக்கக் கோரிய இலங்கை ராணுவத்தின் ஃபேக்ஸ், டெல்லிக்கு இவர் அனுப்பிய பதில், ‘ஒப்படைக்கிறேன்’ என கருணாநிதி கைப்பட எழுதிக்கொடுத்த கடிதம் என அனைத்து ஆதாரங்களும் இருந்தன.

சொன்னபடியே சட்டசபையில் எம்.ஜி.ஆர்.அந்த ஆதாரங்களை முழுமையாக வாசித்தார். இது சட்டமன்றக் கோப்புகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

‘என் மரணத்திற்குப் பிறகு என்னுடைய கண்களை பார்வையில்லாத ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப்போகும் தமிழீழத்தை அந்தக் கண்களின் வழியாக நான் பார்க்க விரும்புகிறேன்’, இலங்கை வெளிக்கடைச் சிறையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட மாவீரன் குட்டிமணி மரணத்தின் வாயிலில் நின்று உகுத்த வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகளுக்காகவே சிங்கள ராணுவம் குட்டிமணியின் கண்களைத் தோண்டி பூட்ஸ் காலால் நசுக்கிய வரலாறை உலகமெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மறந்து விடவில்லை.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கை விசாரித்து வந்த தடா சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் பெயர்களை நீக்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்களது மரணச் சான்றிதழ்கள் இன்னமும் இலங்கை அரசால் வழங்கப்படவில்லை.

இதற்காக பலமுறை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குப் படையெடுத்தும் பலனில்லை. ‘கொழும்புவில் உள்ள இந்திய துணைத் தூதர் மற்றும் இலங்கை அரசு கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இவர்கள் பெயர்களை வழக்கில் இருந்து நீக்க வேண்டும்’ என்ற சி.பி.ஐ. தலைமை விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பேரில் பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன…”, என்றார்.

வைகோ பேசுகையில், “என்னை வெளிநாடுகளில் பேச அழைக்கிறார்கல் தமிழ்ச் சகோதரர்கள். ஆனால் நான் போகப் போவதில்லை. அந்த வேலையை தமிழகத்திலேயே செய்யப்போகிறேன்…” என்று ஆரம்பித்தவர், கருணாநிதியின் துரோகங்களைப் பட்டியலிட்டார்.

இறுதியில் “நிறைவாக இருக்கும் வரை மறைவாக இரு’ என காசி ஆனந்தனின் வரிகள், பிரபாகரனுக்கும் பொருந்தும்!” என்று அவர் தனது பேச்சை முடித்த போது கூட்டம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தது.

Monday, September 6, 2010

விழுப்புரம் மாவட்டம், சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறை அத்துமீறல்களும்:

தண்டவாளத் தகர்ப்பும் காவல்துறை அத்துமீறல்களும்



விழுப்புரம் மாவட்டம், சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறை அத்துமீறல்களும்:
- உண்மை அறியும் குழு அறிக்கை
19 ஜூன் 2010, விழுப்புரம்.


சென்னை - திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன் 12ஆம் நாள் இரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தண்டவாளம் தகர்ந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும் உயிரிழப்பை எற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எத்தகைய நியாயமான நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன் மூலம் எந்த நியாயங்களைப் பெற்றுவிடவும் இயலாது.

இந்தத் தண்டவாளத் தகர்ப்பிற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து இதுவரை புலனாய்வில் எந்த முக்கியத் தடயமும் கிடைக்காத நிலையில் இது குறித்த விசாரணை என்ற பெயரில் விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றிலும் வாழ்கின்ற தமிழுணர்வுள்ள இளைஞர்கள் சிலர் காவல்துறையால் கடும் துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுவது குறித்து மனித உரிமை செயலாளிகளான எங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்ததையொட்டி இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) சென்னை.
2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.
3. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL) காரைக்குடி.
4. பி.வி.ரமேஷ், மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம், விழுப்புரம்.
5. M. பரக்கத்துல்லா வழக்குரைஞர் , மனித உரிமை அமைப்புகளுக்கான தேசிய
கூட்டமைப்பு, (NCHRO) திண்டுக்கல்.
6. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) திருவாரூர்.
7.இரா.முருகப்பன்,இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.
8. பாஸ்கர், வழக்குரைஞர், மக்கள் கண்காணிப்பகம், வேலூர்.
9. லூசியானா, வழக்குரைஞர், மனித உரிமை இயக்கம்,
11. ஆ.ராஜகணபதி, வழக்குரைஞர், திண்டிவனம்.
11. சு.காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.
12. ரஸ்கின் ஜோசப், வழக்குரைஞர், விழுப்புரம்.
13. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், பண்ருட்டி.

இக்குழு நேற்று (ஜூன்-18 ) அதிகாலை முதல் க்யூ பிரிவு போலிசாரால் மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட 11 தமிழுணர்வுள்ள இளைஞர்கள் மற்றும் விழுப்புரம், சித்தணி பகுதிகளிலுள்ள பொதுமக்கள், விழுப்புரத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தது. வீடு புகுந்து க்யூ பிரிவு போலீசாரால் சோதனையிடப்பட்ட தமிழுணர்வுள்ள 3 இளைஞர்களின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டது. சித்தணியில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும், பேரணி ரயில் நிலையத்திற்கும் சென்று சம்பவ இடத்தையும், முக்கிய ஆவணங்களையும் பரிசீலித்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விக்கிரவாண்டி காவல்நிலைய ஆய்வாளர் டி.விவேகானந்தன், விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து ஐபிஎஸ், சிறப்பு புலனாய்வுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலூர் க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரம் ஆகியோருடன் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியது. பேரணி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் சங்கரவடிவேலுவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில அய்யங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டது.

மேற்கண்ட விசாரணைகளின் ஊடாக அறிய வந்த உண்மைகள்:

1.ஜூன் 12ம் தேதி இரவு சரியாக 1:45 மணியளவில் கம்பன் எக்ஸ்பிரஸ் (வண்டி எண். 6173) சம்பவ இடத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த ரயிலின் வருகையால் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் எக்ஸ்பிரஸ் (1064) சற்றுப்பின் சம்பவ இடத்தைத் தாண்டிச் சென்றவுடன் சரியாக 2:08 மணியளவில் அவ்வண்டியின் கார்டு ராஜாராமன் வாக்கிடாக்கி மூலம் பேரணி நிலையத்திற்கு அனுப்பிய செய்தி பதிவேட்டில் (டிஎஸ்ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 145/10-2, கி.மீ தொலைவில் ரயில் கடக்கும்போது ஒரு பெரும் சத்தம் ஒன்றை உணர்ந்ததாகக் கார்டு கூறியதையொட்டி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6178) இரவு 2:23 மணியளவில் நிறுத்தப்பட்டதனால் பெரும் விபத்தொன்று தவிர்க்கப்பட்டது. அருகில் சென்று பார்த்த பொழுது 98 செ.மீ நீளத்திற்கு ஒருபக்கத் தண்டவாளம் இல்லாதிருந்ததும் அவ்விடத்தில் உள்ள சரளைக் கற்கள் முற்றிலும் சிதறிப் பள்ளம் ஒன்று உருவாகி இருந்ததும் கண்டறியப்பட்டது.

அருகில் உள்ள கிணறு ஒன்றின் மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் தண்டவாளப் பெயர்ப்பு நடத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்விடத்தைக் கடக்கும் முன்னர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததா இல்லை கடந்த பின்னர் நடந்ததா என்பது குறித்து அதிகாரிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சுமார் 1மீட்டர் நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தண்டவாளம் இல்லாத நிலையில் அதிவேகமாகச் செல்லும் ஒரு ரயில் விபத்தின்றி கடந்துவிட வாய்ப்புண்டு எனச் சிலர் கூறுகின்றனர். இது குறித்து நுணுக்கத்திறன் உள்ள பொறியாளர்களே கருத்துக் கூற முடியும் என்றாலும் தானறிந்த வரையில் அவ்வாறு நடப்பது சாத்தியமில்லை எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது ஓர் அதிசயம் (Miracle) எனவும் நிலைய அதிகாரி சங்கரவடிவேலு குறிப்பிட்டார். சித்தணியைச் சேர்ந்த ஜெயா என்கிற பெண்மணி முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் ரயில் ஒன்று கடந்த சப்தம் கேட்டதாகவும் கூறினார். தண்டவாள பெயர்ப்புக்குப் பின்னும் சேலம் எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் கடந்துள்ளது என மக்கள் நம்புகிறார்கள் என்றாலும், இது குறித்த நுணுக்கத்திறன் பெற்ற பொறியாளர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் இறுதி முடிவு தெரிவிக்காதவரை எந்த முடிவுக்கும் வர முடியாது என்றார் டிஐஜி மாசானமுத்து. எப்படி இருந்தாலும் கவனமாகச் செயற்பட்டு விபத்தைத் தடுத்த ரயில்வே ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சம்பவ இடத்தில் கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை என்றார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன். எனினும் முதல் தகவல் அறிக்கையில் (குற்ற எண் 259/2010) கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிமருந்து பொருள் சட்டம் பிரிவு 3 மற்றும் ரயில்வே சட்டப் பிரிவுகள் 150(2) (b), 151 (1) (2), பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவு 4, சட்ட விரோத நடவடிக்ககள் தடுப்புச் சட்டப்பிரிவு 13, மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307. ஆக இன்றுவரை யார் செய்தார்கள் என்பது குறித்து எந்தத் துல்லியமான தகவல்களும் புலன்விசாரிக்கும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

2. தண்டவாளத் தகர்ப்பு நடந்த அடுத்தநாளே காவல்துறை இயக்குநர் லத்திகா சரண் ஒரு குறிப்பிட்ட இயக்கத்திற்கும் இதற்கும் தொடர்பு இல்லை எனக் கூறினார். சம்பவ இடத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிற ஒரு துண்டறிக்கையை மையமாக வைத்து விடுதலைப் புலிகள் ஆதரவு - தமிழ் தேசிய சக்திகள் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும் என்ற ஒரே கோணத்தில் மட்டும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அந்த அடிப்படையில் புலன் விசாரணை ஜூன் 14 அன்று க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் ஜூன் 12ம் தேதி பகல் தொடங்கி தமிழ் தேசிய உணர்வுடைய கீழ்க்கண்ட 11 இளைஞர்கள் க்யூ பிரிவு காவலர் கார்த்திக் என்பவரின் அடையாளம் காட்டலில் பிடித்துச் செல்லப்பட்டனர்.

1. கா.பாலமுருகன் (எ) தமிழ்வேங்கை (24), த.பெ. காசிநாதன், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், எல்ஒசி முகவர், பிடித்துச் செல்லப்பட்ட தேதி : ஜூன்-12.

2. எழில் இளங்கோ, (43), த.பெ. விழுப்பறையனார், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.

3. ஜோதி நரசிம்மன் (36), த.பெ. பாண்டுரங்கன், விழுப்புரம்.
தொலைக்காட்சி நிருபர், தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12.காலை 9-20

4. ஏழுமலை (37), த.பெ. தேவராஜ், ப. வில்லியனூர்.
புத்தக விற்பனையாளர், தமிழர் கழகம், ஜூன்:12, காலை 11-மணி.

5. பாபு (37), த.பெ. கோதண்டம், அச்சகம், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12. பகல் 2-00

6. குமார் (37), த.பெ. கலியபெருமாள்,
தமிழர் தேசிய இயக்கம், உளுந்தூர்பேட்டை. ஜூன்-12. இரவு 10-30.

7. சக்திவேல் (40), த.பெ. அண்ணாமலை,
திமுக கிளை செயலாளர், செஞ்சி.

8. கணேசன் (43), த.பெ. கோதண்டபாணி,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.. ஜூன்-12. காலை 11-00 மணி

9. ராஜநாயகம் (39), த.பெ. நாராயணசாமி,
ம.தி.மு.க. செஞ்சி.ஜூன் 13, இரவு 1 மணி.

10. சிவராமன் (41), த.பெ. பலராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-14. காலை 7-15

11. ஜெயராமன் (32), த.பெ. ஜானகிராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-12. இரவு 11-00

இவர்கள் அனைவரும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள காணை (3பேர்), கெடார் (2பேர்), கஞ்சனூர் (3பேர்) வளவனூர் (2பேர்) சத்தியமங்கலம் (ஒருவர்) என மேற்கூறிய பல்வேறு காவல் நிலையங்களில் வைத்துத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர். வெறுந்தரையில் உட்காரச் சொல்லி தொடர்ச்சியாக 5 மணிநேரம் பின்னர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் 5 மணிநேரம் என மாறி மாறி பல்வேறு காவல்துறைப் பிரிவினர், அதிகாரிகள் ஆகியோர் ஒரே மாதிரியான கேள்விகளைத் திருப்பித் திருப்பி கேட்டுள்ளனர். 1 முதல் 9 வரை மேலும் கீழுமாக எழுதுதல், ஆங்கில தமிழ் எழுத்துக்களை எழுதுதல் என்றவாறு விசாரணை தொடர்ந்துள்ளது. ஒரு சிலரை இரண்டாம் நாள் இரவு உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஜாமீன் கடிதம் வாங்கிக் கொண்டு அனுப்பி மீண்டும் அடுத்தநாள் வரவழைத்துள்ளனர். 'தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனை உனக்கு எவ்வாறு தெரியும்? அவர் ஏன் முதல்வர் கருணாநிதியை துரோகி என்றெல்லாம் பேசுகிறார்? நீ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறாயா? இந்த சம்பவத்தை ஏன் செய்தாய்? கடந்த 5 நாட்களில் யார் யாரை எல்லாம் சந்தித்தாய்?" - முதலான கேள்விகள் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டன.

இதற்கிடையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 15ம் நாள் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இது தொலைகாட்சிகளில் அறிவிக்கப்பட்டவுடன் அன்று இரவு 11.00 மணியளவில் அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது முன்னதாக ஒவ்வொருவரிடமும் தாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எழுதித்தருமாறு கேட்டனர். வற்புறுத்தப்பட்டதன் பேரில் ஒரு சிலர் அவ்வாறு எழுதியும் கொடுத்தனர். ஒருசிலர் அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தனர். இன்னும் ஒரு சிலரிடம் ஆஜர் முச்சரிப்பில் மேலே சிலவரிகள் இடைவெளிவிட்டு கையொப்பங்கள் பெறப்பட்டன. எல்லோரின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன, புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வெளியே செல்லும்போது வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 15இம் தேதியன்று எழில் இளங்கோ, ஜோதிநரசிம்மன் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று சுமார் 3 மணிநேரம் அறைகளைக் கலைத்துச் சோதனையிடப்பட்டுள்ளனர். தமிழ்வேங்கை இல்லத்தில் 16ம் தேதி இவ்வாறு சோதனையிடப்பட்டது. எழில் இளங்கோவின் வீட்டில் ஒருகதவின் பூட்டையும் உடைத்துள்ளனர். அனைவரின் வீடுகளிலும் புத்தகங்கள், குறுந்தகடுகள், செல்போன்கள் போன்றவற்றைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர். எழில் இளங்கோ வீட்டில் அவரைக் கைதுசெய்ய வந்த அன்று யாரும் இல்லாத நிலையில் அவரது தந்தையின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் கலைத்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரத்தில் எழில் இளங்கோ வீட்டில் அவரது மனைவி கோதை, தமிழ்வேங்கை வீட்டில் அவரது மனைவி மங்கையர்க்கரசி ஆகியோர் தனியாக இருந்தபோது இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்வேங்கையின் மனைவி மங்கையர்க்கரசி அச்சத்தால் உள்ளிருந்த கதவை தாளிட்டிருந்த நிலையில் காவல்துறையினர் குறிப்பாக க்யூ பிரிவு கார்த்திக் கதவை திறக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரும்வரை கூடக் காத்திருக்க தயாராக இல்லை.

இங்கொன்றைச் சொல்வது முக்கியம். இவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும், ஜனநாயகபூர்வமாகவும் பலகாலமாக விழுப்புரத்தில் இயங்கி வருபவர்கள். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க காவல்துறையால் அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டபோது அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பைத் தந்துள்ளனர். கூப்பிட்டபோதெல்லாம் எங்கு வரச்சொன்னாலும் அங்கு சென்று தங்களை ஒப்படைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவும், சோர்வின்றியும் பதிலளித்துள்ளனர். எனினும் இவர்களை 4 நாட்கள் சட்டவிரோதமாக க்யூ பிரிவு காவல்துறையினர் அடைத்து வைத்து மனஅளவிலான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

3. நான்கு நாட்கள சட்டவிரோதக் காவலில் தடுத்துவைக்கப்பட்ட மேற்கண்ட 11 இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்கள், பழங்குடியினர், தலித்துகள், முஸ்லீம்கள் ஆகியோர்களின் உரிமைகளுக்காகவும் சுற்றுச்சூழல், ஈழத்தமிழர் உரிமை ஆகியவற்றிற்காகவும், வெளிப்படையாகவும், ஜனநாயகபூர்வமாகவும் இயங்கி வந்தவர்கள். இவர்களைப் பற்றி விழுப்புரம் நகரத்தைச் சார்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எமது குழுவினரிடம் தெரிவித்த கருத்துக்களாவன:

(1) திரு. சக்கரை (திமுக முன்னாள் நகர செயலாளர்)

"இவர்களை நான் பலகாலமாக அறிவேன். ஜனநாயகமுறையில் செயல்படுபவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்பட்டதில்லை. மக்கள நலனுக்காக ரயிலை மறிக்கும் போராட்டம் வேண்டுமானால் நடத்துவார்களே தவிர எந்த நாளும் தண்டவாளத்தை தகர்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்".

(2) மு.ய.முஸ்தாக்தீன் (தமுமுக மாவட்ட செயலாளர்)

"இவர்களோடு நான் நீண்ட நாட்களாக வேலை செய்திருக்கிறேன். தலித்துகள், முஸ்லீம்கள் மற்றும் அடித்தளப் பிரிவினரின் உரிமைகளுக்காக அனுமதிபெற்று சட்டப்பூர்வமான போராட்டங்களைத்தான் நடத்தி வந்தார்கள்".

(3) சி.அப்பாவு (தி.க.)

"பகுத்தறிவு உணர்வு மிக்க இளைஞர்கள், நெடுமாறன் அமைப்பிலிருந்து தமிழ் உணர்வுடன் செயல்படக் கூடியவர்கள். ஜனநாயக விரோதமான வழியில் இவர்கள் செயல்பட்டது இல்லை".

(4) ஏ.வெற்றிசெல்வன் (மாவட்ட செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்)

"இவர்களில் 5,6பேரை எனக்குத் தெரியும். மனித உரிமை மீறல்களைக் கண்டால் ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பார்கள்".

(5) டாக்டர். இரா.மாசிலாமணி ( Ex. MLA மாநில பொருளாளர், மதிமுக)

"காவல்துறையினர் ஆரம்பம் முதலே முன் முடிவுகளுடன் இயங்கி வருகிறார்கள். எந்த விசாரணையையும் செய்யாமலேயே மாவோயிஸ்டுகளுக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்றார்கள். இந்த நிகழ்ச்சியுடன் இந்த இளைஞர்களைத் தொடர்புபடுத்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்கள். தினமணி நாளிதழ் தலையங்கத்தில் எழுதியதுபோல் உளவுத்துறையினர் இந்த காரியத்தைச் செய்திருக்கலாமே தவிர இவர்கள் செய்திருக்க மாட்டார்கள்".

(6) பாஸ்கர் (அஇஅதிமுக நகர செயலாளர்)

(எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் நான் எதையும் பேசமாட்டேன்
என்று எங்களுடன் பேச மறுத்தார். தண்டவாளத் தகர்ப்பு தவறு என்கிற கருத்துதான் எங்களுடைய கருத்தும் கூட, உள்ளூர்க்காரர் என்கிற முறையில் இந்த 11 பேரைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோதும் கட்சி நிலைப்பாடு தெரியாமல் பேசமாட்டேன் எனப் பேச மறுத்துவிட்டார்).

(7) வே.அந்தோணி குரூசு (சாந்தி நிலையம், குழந்தைகள் உரிமை இயக்கம்)

"இந்த 11பேரையும் எனக்குத் தெரியும் இவர்கள் தமிழ் ஆதரவாளர்கள். பெரும்பாலோர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். காவல்துறை அனுமதியின்றி எந்தப் போராட்டத்தையும் இவர்கள் நடத்தியதில்லை. தமிழுணர்வாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு இவர்களைப் பழிவாங்குகிறது".

(8) தமிழேந்தி (வி.சி.)

"இந்த ஊருக்கு வந்த 17 ஆண்டுகளாக இவர்களில் பலரை எனக்குத் தெரியும். குறிப்பாக எழில் இளங்கோ, ஜோதிநரசிம்மன் போன்றோர் எனது நெருங்கிய நண்பர்கள். மனித உரிமை மீறல்களைப் பொறுக்கமாட்டார்கள். ஆனால் அமைதி வழியிலேயே அவற்றை எதிர்ப்பார்கள்".

(9) ஸ்டாலின்மணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

"தண்டவாளப் பெயர்ப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால் இவர்கள் அதைச் செய்திருக்கமாட்டார்கள. இவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் இல்லை".

(10) கோ.ப.அன்பு (பா.ம.க.)

"நல்ல தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள். தமிழில் பற்று வைப்பதை குற்றம் என்றா சொல்லமுடியும்? இவர்கள் வெளிப்படையாக இயங்கியவர்கள்.அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. செம்மொழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழுணர்வாளர்களை இப்படி கொடுமைப்படுத்தக் கூடாது".

(11) ஆனந்தன் (மா.கம்யூ.கட்சி)

"ஜனநாயக முறையில் தமிழ் ஆதரவு குறித்து செயல்பட்டு வந்தவர்கள். பாலமுருகன் உள்பட அனைவரையும் எனக்குத் தெரியும். இந்த மாதிரி தீவிர நடவடிக்கைகளில் எல்லாம் இவர்கள் இறங்கக் கூடியவர்கள் இல்லை".

(12) த.பழமலய், மூத்த தமிழ்க் கவிஞர்.

"நெடுமாறன் ஐயா மற்றும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்களாலும் பணிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படும் இந்த இளைஞர்களை நான் அறிவேன். தமிழுணர்வுள்ள இவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஓடுகிற தமிழ் மக்களை ஏற்றிச் செல்லும் வாகனம் ஒன்றைக் கவிழ்த்து தமிழர்களைக் கொல்ல முயற்சிக்க மாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். தவிரவும் இவர்கள் இத்தகைய தொழில் நுட்பங்கள் எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை".

4.காவல்துறை அதிகாரிகளை நாங்கள் சந்தித்து இதுபோல சட்டவிரோதமாக நான்கு நாட்கள்வரை தடுத்து வைக்கப்பட்டது குறித்து கேட்டபொழுது அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. விசாரணை முழுக்க க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் எதுவும் கருத்துச் சொல்ல முடியாது என டிஐஜி மாசானமுத்து கூறினார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபொழுது, "நீங்கள் எனது நாற்காலியில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்" என்றார். க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரத்திடம் பேசியபொழுது "அவர்கள் வெளிப்படையாகச் செயல்படுபவர்கள் என்று எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்களை நாங்கள் கண்ணியமாக நடத்தினோம்" என்றார். சட்டவிரோதமாக 4 நாட்கள் தடுத்து வைத்திருந்தது பற்றி கேட்டபொழுது ''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தினம் அவர்களை வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதித்தோம்" என்று முழுப் பொய்யுரைத்தார்.

5. நாங்கள் இந்த விசாரணையை மேற்கொண்டிருந்த நேற்று (ஜூன்-18) மதியம் மேற்படி ஜோதிநரசிம்மன், பாபு, ஏழுமலை, குமார் ஆகியோரும் இவர்களோடு தங்கராசு, முருகன் என்பவர்களும் க்யூ பிரிவு போலீசாரைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு கீழ்கண்ட பிரிவுகளின்படி வழக்கு தொடர்ந்து ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகர காவல் நிலைய குற்ற எண் 226/2010 குற்றப்பிரிவுகள் 147 மற்றும், 1959 சுவரொட்டி சட்டம் 4(1), 4(ஏ), மற்றும் 151 சிஆர்பிசி. ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் முருகன் என்பவர் கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் ஒரு தொழிலாளி, எந்த இயக்கங்களிலும் தொடர்பில்லாதவர்.

சுவரொட்டி ஒட்டியதாக இத்தனை கடும்பிரிவுகளின் கீழ் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நாங்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது. விசாரிக்கிறேன் என டிஐஜியும் க்யூ பிரிவு சுந்தரமும் கூறினார்கள்.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்:

01. ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லாப்படும் கையால் எழுதப்பட்ட ஒரு தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது. உளவுத்துறை கூட இதைச் செய்திருக்கலாம் என்கிற கருத்துக்கள் கூட மக்கள் மத்தியில் நிலவும் நிலையில் இப்படி அவசர கோலமாக ஒரு குறிப்பிட்ட அமைப்மைச் சேர்ந்தவர்கள் காவல்துறையின் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழர் தேசிய இயக்கம் என்கிற ஒரு அமைப்பே இன்று இலக்காக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈழத் தமிழர்கள் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடி வந்த இந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், எழில் இளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துப் பழிதீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

02. தாங்கள் எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்காக இந்த 11 இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4 நாட்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினரை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கவேண்டும்.

03. தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பாக வல்லுனர் குழுவின் அறிக்கையொன்றை அரசு வெளியிடவேண்டும். இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஓரு டிஐஜி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்குட்படுத்த வேண்டும்.

04. வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்திற்காக இந்த 11 பேரில் நால்வர் உள்ளிட்ட அறுவரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்.

05.விழுப்புரம் மாவட்ட மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறையின் அத்துமீறல்களைத் தொடர்ந்து போராட்டங்கள், சிறு வெளியிடுகள், மாநாடுகள், பேரணிகள் ஆகியவற்றின் ஊடாக வெளிக்கொணர்ந்து வருவது பாராட்டுக்குரியது. தண்டவாளப் பெயர்ப்பை ஒட்டி நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களிலும் உடனடியாகத் தலையிட்டு சுவரொட்டிகள் முதலியவைகள் அச்சிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த விழுப்புரம் மாவட்ட மனித உரிமை அமைப்புகளையும் அவர்களுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரையும் இக்குழு பாராட்டுகிறது.

தொடர்பு முகவரி : அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை -2

செல் : 94441 20582