Kadhai Alla Nijam

Tuesday, September 23, 2008

கடிதம்

ணக்கம்,


நீண்டநாட்களுக்கு பிறகு ஒரு கடிதம் எழுதாலாம்னு தோனுச்சி அதுவும் எதைபற்றி எழுதலாம்னு சிந்திக்கும் போதுதான் இன்றைய செய்தித்தாள்ல சப்பான் நாட்டுடன் புதிதாக ஒரு தொழில் துவங்க நம்ம முதல்வர் கலைஞர் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட செய்தியை பார்த்தேன். கடந்த ஆண்டு 1989லிருந்து இன்றைக்கு வரைக்கும் 70,000 கோடிக்கு டோக்கியோ கம்பெனிக்கும்,நோக்கியோ கம்பெனிக்கும் தமிழ்நாட்டுல தொழில்தொடங்க ஒப்பந்தம்போட்டு நாட்டுல 30%நிலத்த தாரவாத்து கொடுத்திருக்கு திராவிடகட்சிகள்
கடந்த 1991-96 வரை அ.தி.மு.க ஆட்சியில1.700 கோடி ரூபாய் முதலீட்டில ஒரே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கு1996-2001 தி.மு.க.ஆட்சியில3.728 கோடி முதலீட்டடில் 9புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டன,2001-2006அ.தி.மு.க.ஆட்சியில2.560கோடி ரூபாய்முதலீட்டில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டில்,தி.மு.க.ஆட்சியின் போது18.483 கோடி ரூபாய் முதலீட்டில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தம் இதனால் 1,50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்குதாம் தமிழக அரசு ந்ம்ம இளைஞ்ஞர்கள் இது தெறியாம இன்னும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலே காத்துகிடக்கிறாங்க பாவம்
2006ம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த சனவரி வரை8 மாதத்தில் 44,88,000கோடி ரூபாய் தமிழகத்தில்புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கு வரும்காலங்களில் அமெரிக்கா,சப்பான்,கொரியா,பிரான்சு,செர்மனின்னு இன்னும் மீதி இருக்கிற நாட்டையும் கொத்தகைக்குவிட தீவிரமா நடவடிக்கை எடுத்து வருது தி.மு.க. அரசு
நடப்பு ஆண்டில் இதுவரை 30,000 கோடி ரூபாய் முதலீட்டில் 25 உடன்பாடுகல் நிரைவேற்றிநாட்டை ஏலம் விட்டிருக்கிறதா 6-5-2008 ல் சட்டமன்றத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கூவி இருக்கிறார் அதுலையும் அ.தி.மு.க.4,280 கோடிக்குதான் நாட்டை ஏலம்போடமுடிஞ்சிது நாங்க 66.299கோடிக்கு ஏலம் விட்டிருக்கோம் இன்னும் எதிர்காலத்தில் நிறைய ஏலம் போவும் இது எங்களுடைய சாதனை அதனால அடுத்த தேர்தல்ல இப்போ போட்டமாதிரியே எங்களுக்கே ஓட்டு போடுங்க போன தேர்தலில் கொடுத்தைவிட இந்தமுறை சரக்கு கொங்சம் அதிகமா தர்ரோம்னு பெருமிதப்பட்டார் ஸ்டாலின்
கடந்த 18 ஆண்டுகளாக கழக ஆட்சியில் 70,000 கோடிக்கு ந்ம்ம தமிழ்நாட்டை அடமானம் வச்சிருக்கு,இத சொன்னா உடன் பிறப்புக்கு கோவம் வந்திடும், நாங்க நாட்டமுன்னேத்ததானே இதெல்லாம் செய்யறோம்னு தலைவர்மாதிரியே கவிதை பாட ஆரம்பிச்சுடுவாங்க,இவங்க நாட்டை முன்னேற்றி வெளிநாட்டுகாரங்கிட்ட அடமாணம் வைக்க நம்ம வரிப்பணம்தான் கிடைச்சுதா
என்ன சிந்திக்கிறீங்களா? இவங்க கட்டுறதொழிற்சாலைக்கு அரசு புறம்போக்கு நிலத்த கொடுக்குது பத்தலன்னா நம்ம விவசாய நிலத்தையும் குரைஞ்ச வெலைக்கு வாங்கி கொடுக்குது
அந்த தொழிற்சாலைக்கு சொந்தமான தண்ணீர்,நமக்கு வர கரண்ட ஒரு நாளைக்கு5 மணி நேரம் நிறுத்திட்டு அந்த தொழிற்சாலைக்கு கரண்டு, 5 வருடத்துக்கு அந்த தொழிற்சாலைக்கு வரி இல்ல,அங்க உற்பத்தியாகிற பொருளை கொண்டுபோக நால்வழிசாலை,ஆறு வழிச்சாலை,துறைமுகம்னு ந்ம்ம வரிப்பணம் தான் செலவாகுது .
ஏன் அவன் நாட்டுல இதை தயார் பன்ன கூடாதான்னு நீங்க கேப்பீங்க அவன் நாட்டுல செஞ்சா,வரிகட்டனும்,வேலைக்கு ஆளுக்கு கூலி அதிகமா தரனும்,செலவு அதிகம் ஆவும் அதனால நம்ம நாட்டுல செஞ்சி அவன்நாட்டுக்கு கொண்டுபோறான். இதனால ந்ம்ம ஆளுங்களுக்கு கூலி கெடைக்குதே லாபம் தான நமக்குன்னு நீங்க நினைப்பீங்க அதுதப்பு,அவனுடையதொழிற்ச்சாலையில வேலை செய்யிற நம்ம தொழிலாளிக்கு கையோ,காலோ,ஏன் உயிரே போனாகூட தொழிலாளிக்கு எந்த இழப்பீடும் தரமாட்டான்.ஏன்னா அதான் புரிந்துணர்வு ஒப்பந்தம் அவன் தொழிற்சாலையில் வேலை செய்யிரநமக்கு இந்திய தொழிற்சாலை சட்டம் செல்லாதுன்னு ஒப்பந்தம் போடுறான்,ந்ம்மாளும் பத்திரிக்கை போட்டோவுக்கு போஸ் கொடுத்து இத மாத்திக்கிறான் என்னமோ தி.மு.க.தான் பல மடங்கு அன்னிய முதலீட்டை பெற்று நாட்டைமுன்னேற்றி வருதுன்னு மக்களை ஏமாத்துறாங்க
நம்ம தமிழ்நாட்டுல தமிழர்களுக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு கார் நிறுவனத்தை மூடிட்டு அந்த தொழிலாளி குடும்பம் நடுத்தெருவுல நிக்குது இது நம்ம முதல்வருக்கு தெறியாதா?
நாட்டை முன்னேற்ற ந்னு சொல்லி இலவசங்களை வாரிவழங்கி இளைஞர்களை போராடவிடாமல் மூளையை மழுங்க செய்து,அவர்களை ஒட்டுபோடுற பிரானிகளாக மாத்திவறாங்க அரசியல்வாதிங்க இதுக்காகவே பி.எச்.டி படிக்கிறாங்க
குழப்பமா இருக்குதா,,,,,,,,,,
கிலோ அரிசி ஒரு ரூபாய்ங்க
கட்டணக்கழிப்பறையில கக்கூஸ் போறதுக்கு 3ரூபாய் இதுதான் நாட்டின் வளர்ச்சி.
அடுத்ததேர்தலுக்கு தயாரா இருங்க பொதுமக்களே!
சரக்கு வெலைய ஏறாம பாத்துக்கோங்க தலைவர்களே!!!!!!!!!!!!!!!!!!!

No comments: