Kadhai Alla Nijam

Tuesday, December 30, 2008

சிறிலங்கா இராணுவத்தில் மேலும் ஒரு சிறுவர் சிப்பாய் பலி








சிறிலங்கா இராணுவத்தில் மேலும் ஒரு சிறுவர் சிப்பாய் பலி

முல்லைத்தீவு நகரை நோக்கி நேற்று அதிகாலை சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடாத்திய முறியடிப்புச் சமரில் 68ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பல படையினர் படுகாயங்களுக்குள்ளாகினர்.
இந்த தாக்குதலின்போது பலதரப்பட்ட படையப்பொருட்களும் 16 படைச் சடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் பலர் சிறுவர் படையினராக இருந்துள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய போரில் ஈடுபடுத்த முடியாத 17 வயதானவர் (26.06.1991இல் பிறந்தவர்) என அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது. அவரது பெயர் ராஜபக்ச மொகட்டகே ரவி துஷ்மந்த எனவும், பிறந்த இடம் ரதவான எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு மாணவர் எனவும் அவரது முகவரி 119/1 விலபேள் சேரன்ஹம மேற்கு மாகாணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கொல்லப்பட்ட பலர் 19 வயதுடையவர்கள் என்றும் அவர்களின் அடையாள அட்டைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது 17, 19 வயதில் களமுனையின் முன்னணிப் போர் முனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றால் எத்தனை வயதில் அவர்கள் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த காலங்களில் களமுனையில் இருந்து மீட்கப்பட்டுள்ள சடலங்கள் பல சிறுவர் படைகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments: