Kadhai Alla Nijam

Monday, October 20, 2008

பழ. நெடுமாறனின் அறிக்கை ஆறுதலளிக்கிறதுகிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென மனித சங்கிலிக்கு வாரீர்: கருணாநிதி

-பழ. நெடுமாறனின் அறிக்கை ஆறுதலளிக்கிறதுகிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென மனித சங்கிலிக்கு வாரீர்: கருணாநிதி
[சனிக்கிழமை, 18 ஒக்ரோபர் 2008, 12:30 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
தமிழக அனைத்து கட்சிக்கூட்டத்தை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதாவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ஆறுதலளிப்பதாகவும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள மனித சங்கிலி அணிவகுப்புக்கு "கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக் கூட்டமென" தமிழர்கள் அணிதிரண்டு வர வேண்டும் என்றும் தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கலைஞர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்து அரசியல் இயக்கங்களும், அமைப்புக்களும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வலியுறுத்தியதின் காரணமாக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் தொடர்ந்து விரைவுபடுத்திடவும் - நிலையான அமைதி இலங்கையில் உருவாகிடத்தக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், இனப்படுகொலையும், போரும் அல்லாத சூழ்நிலையை உருவாக்கவும் மத்திய அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக தமிழக அரசின் சார்பில் அனைத்து கட்சித்தலைவர்களின் கூட்டம் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை (14.10.08) கூட்டப்பட்டு, அதற்கான அழைப்புக் கடிதங்களை ஒவ்வொரு கட்சியின் தலைவருக்கும் நானே கையெழுத்திட்டு அனுப்பினேன்.
கடிதங்கள் அனுப்பப்பட்ட செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது. அதில் நான்கு கட்சிகள் மட்டும் அரசு சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் கூட்டப்பட்ட அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகச் செய்தி அறிவித்தார்கள்.
அவர்களைத்தவிர மற்ற கட்சியினர் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்து, இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வில் அக்கறையோடு தங்கள் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
அவர்களுக்கெல்லாம் அந்தக் கூட்டத்திலேயே நன்றி தெரிவித்துக்கொண்டேன். இப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அரசின் சார்பாக நான் அழைப்பு விடுத்து கூட்டிய அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தையே கண்துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா புறக்கணிப்பு செய்தார்.
அரசு கூட்டியுள்ள அனைத்து கட்சித் தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்த அடுத்த கணமே ம.தி.மு.க. தலைவர் வைகோவும் அனைத்து கட்சிக்கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். விஜயகாந்தும் வரவில்லை.
ஜெயலலிதா புறக்கணித்த அனைத்துக் கட்சிக்கூட்டத்தில், இலங்கையில் நடைபெறுகின்ற தமிழர் இனப்படுகொலையைக் கண்டித்தும், போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டும் என்றும், இரண்டு வாரக் காலத்திற்குள் அதாவது ஒக்ரோபர் 28 ஆம் நாளுக்குள் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments: