Kadhai Alla Nijam

Monday, November 17, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி எதிர்வரும் 25ம் திகதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு:



இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி, தமிழகத்தில், வரும் 25 ஆம் தேதி முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று சென்னையில், இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், பாஜக ஆகிய முக்கிய கட்சிகள் புறக்கணித்துவிட்டன.

அதே நேரத்தில் பாமக, மதிமுக ஆகியவை இதில் பங்கேற்றன. மேலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், லட்சிய திமுக தலைவர் விஜய.டி.ராஜேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், பெரியார் தி.க. தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் அப்துல் சமது, தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, தமிழ் தேச மார்க்சிஸ்ட் தலைவர் ராஜேந்திர சோழன், இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லா ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட அக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் இதி்ல் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 25 ஆம் தேதி பந்த் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தா.பாண்டியன் தெரிவித்தார்.

முன்னதாக இந்தக் கூட்டம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், இந்த கூட்டத்துக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை கூறிவிட்டா

1 comment:

maduraibabaraj said...

a very very well thought out move.this is the only way to express our unstinted support and solidarity.this is the right time.all barriers of political affiliation should be ignored.a right move at a right time.a silent nonviolent revolutionary move to support the thousands of innocent tamils who are on streets without basic needs.they are refugees in their own country.this should not be construed as support to extremism.ltte is ready for cease fire but rajabakshe is not!why?he has to answer.all neutral minded people should respond to this call.
we ask for ceasefire from both parties and the dispute should be settled through negotiations.our prime minister and chief minister should initiate the move and find a permanent solution.

babaraj s.p