Kadhai Alla Nijam

Saturday, November 8, 2008

சிங்கள இராணுவத்தின் கொலை வெறியைப் பாராட்டும் அமெரிக்கத் தளபதியின் கருத்துக்கு நெடுமாறன் கண்டனம்



சிங்கள இராணுவத்தின் கொலை வெறியைப் பாராட்டும் அமெரிக்கத் தளபதியின் கருத்துக்கு நெடுமாறன் கண்டனம்


சிங்கள இராணுவத்தின் கொலை வெறியைப்பாராட்டும் அமெரிக்கத் தளபதி கருத்தை தமிழீழ ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு:

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்ற செய்தி வெளியான நேரத்தில் பசிபிக் பிராந்தியத்தின் அமெரிக்க கடற்படைத் தளபதியான திமோத்தி ஜே, கியாட்டிங் என்பவர் சிங்கள இராணுவத்தைப் பாராட்டிக் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென தமிழ்நாட்டில் கட்சி வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் ஒற்றுமையாகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தும் முறையில் சிங்கள இராணுவத்தின் போர் வெற்றிகளைப் பாராட்டி அமெரிக்கக் கடற்படைத் தளபதி ஒருவர் கருத்துக் கூறியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இலங்கை இனப் பிரச்னைக்கு இராணுவ ரீதியில் தீர்வு காண முடியாது என அறிவித்தப் பிறகு திமோத்தி ஜே. கியாட்டிங் இவ்வாறு சொல்லியிருப்பதின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைப் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு அளித்து வருகிறது. அமெரிக்காவின் சம்மதம் இல்லாமல் பாகிஸ்தான் இவ்வாறு செய்ய முடியாது.

இலங்கை இனப் போரில் அமெரிக்கா தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது என்றக் குற்றச்சாட்டு இப்போது உண்மையாகிவிட்டது. யார் குடியரசுத் தலைவராக இருந்தாலும் அமெரிக்க இராணுவத் தலைமை தனது ஏகாதிபத்தியப் போக்கை ஒரு போதும் கைவிடாது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்துவதற்குக் காரணமான அமெரிக்கா இப்போது ஈழத் தமிழர்களைக் கொன்றுக் குவிக்கும் சிங்கள இன வெறி அரசுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. அமெரிக்காவிற்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்ப முன் வருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

No comments: