
இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கை அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியான எத்தகைய உதவியையும் வழங்கக் கூடாது என்ற இரு கோரிக்கைகளையும் வலியுறுத்தும் வகையில் 12/11/2008 புதன்கிழமையன்று தமிழக சட்டமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.
12/11/2008 அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணாசாலை சிம்ப்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு சட்டமன்றம் நோக்கிச் சென்று கோட்டைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப் பெறும்.
No comments:
Post a Comment