Kadhai Alla Nijam

Thursday, November 20, 2008

தமிழ்நாடு மக்களுக்கு நன்றி

தமிழ்நாடு மக்களுக்கு நன்றி : பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்புதமிழ்நாடு மக்களிற்கு நன்றி தெரிவித்தும், இலங்கையில் இடம்பெறும் திட்டமிட்ட தமிழினப் படுகொலையைக் கண்டித்தும், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.பிரித்தானிய தமிழர் பேரவையும், பிரித்தானிய உள்ளுராட்சிமன்ற அங்கத்தவர்களின் அமைப்பும் இணைந்து நேற்று புதன்கிழமை பிற்பகல் 3:30 முதல் மாலை 6:30வரை இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன.இந்த நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டு தமது ஒற்றுமையையும், விருப்பையும் பிரித்தானிய அரசுக்கும், தமிழ்நாடு மக்களிற்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.இந்த கவனயீர்ப்பு ஒன்று கூடலில் பிரித்தானியாவிலுள்ள சில அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.நேற்று பிரித்தானிய தலைமை அமைச்சர் கோர்டன் பிறவுடனான (Gordon Brown) கேள்வி நேரம் இடம்பெற்றதால், அதிக நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அமர்வில் கலந்து கொண்டிருந்தபோது இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.கடும் குளிரான நிலையிலும் பாடசாலைச் சிறுவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.தமிழின அழிப்பு, மக்களின் அவலங்களைத் தாக்கிய பதாகைகளைத் தாங்கியவாறு, முழக்கங்களை எழுப்பி இவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.அத்துடன், ஆங்கில மொழியில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கல் செய்யப்பட்டன.சிறீலங்காவில் தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி தமிழ்நாட்டுக்கு நன்றி - பிரித்தானிய தமிழர் நன்றியுள்ள மக்கள் - தமிழீழ மக்கள் அப்பாவித் தமிழர்கள் மீதான குண்டு வீச்சை நிறுத்துசிறீலங்கா ஒரு பயங்கரவாத அரசு பிரிதத்தானியா சிறீலங்கா அரசு மீது பொருளாதார தடையை விதி ஐ.நா சிறீலங்கா மீது ஆயுத தடையை விதி ஐரோப்பாவே ஜீ.எஸ்.பீ. பிளஸ் – போர் நிதிக்கான வழி போன்ற முழக்கங்கள் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன

No comments: