Kadhai Alla Nijam

Friday, December 12, 2008

சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்படுவாரேயானால் அவரின் உயிருக்கு பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிங்கத்தின் பாதுகாப்புக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பொறுப்பு என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வைகோவையும் நெடுமாறனையும் கோமாளிகள் என தெரிவித்தமைக்கு எதிராக சென்னையில் உள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகரத்தின் முன்னால் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

சிவாஜிலிங்கம் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவார் என்ற இந்திய அரசாங்கத்தின் உத்தரவு தகவலை நெடுமாறன் இதன்போது குறிப்பிட்டதாக இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து இந்திய மண்ணில் சிவாஜிலிங்கம் மேற்கொண்டு வரும் பிரசாரங்களை அடுத்து அவரை இந்திய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

சிவாஜிலிங்கம் இந்த உத்தரவுப்படி இலங்கைக்கு சென்றால் அடுத்த வினாடியே அவர் கொல்லப்படுவார். எனவே அவர் தமது தாய்நாடான தமிழ்நாட்டில் அடைக்கலம் கோரியுள்ளதாக நெடுமாறன் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சிவாஜிலிங்கம் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டால், அவரின் உயிருக்கு இந்திய பிரதமரே பொறுப்பேற்க வேண்டும். அதற்கு அவரே பதில் சொல்ல வேண்டும் என்றும் பழ நெடுமாறன் குறிப்பிட்டார்.

No comments: