Kadhai Alla Nijam

Monday, April 27, 2009

உறுதிமொழியை மீறி சிறிலங்கா இராணுவம் தாக்குதல்

உறுதிமொழியை மீறி சிறிலங்கா இராணுவம் தாக்குதல்: விடுதலைப்புலிகள்

தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று சிறிலங்கா அரசும், இராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின.

அதேபோல, 1.10 மணிக்கு இன்னொரு முறை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அறிவித்த இலங்கை அரசு அதை மீறும் வகையிலும், உலக சமுதாயத்தையும், குறிப்பாக தமிழக மக்களையும் ஏமாற்றும் வகையில் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு வளையப் பகுதியில், சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து எறிகணைகளை வீசித் தாக்கி வருகின்றன. வலைஞர்மடப் பகுதியிலும் தாக்குதல் தொடருகிறது என்று கூறியுள்ளார்.

3 comments:

ttpian said...

டெல்லியில் உள்ள மலயாலிகலை துரத்தி அடித்தால்தான்,நாம்(தமிழர்கள்) நிம்மதியாக வாழ முடியும்!
இவர்கள் புளிய மரம்:தான் மட்டுமே வளர்வார்கள்.....அடுத்தவனை வளர விடமாட்டார்கள்

ttpian said...

அவசரம்.....அவசியம்.....
மலயாளிகள் நாராயனன்,சிவசன்கர மேனொன்.. விஜய் நம்பியார்(?)..அலொக் ப்ரசாத்.....இந்த 4 பேரையும்,கைது செய்து "விசாரிக்க" வேண்டும்!
இவர்கள் தமிழர்கலின் வாழ்வை அழித்தவர்கள்...
பூனைக்கு யார் மணி கட்டுவது?
ஒரு முறை "சரியாக" விசாரித்தால்,எதிர்காலத்தில்,எந்த கொம்பனும் தமிழனுக்கு எதிராக போகமாட்டான்!

சவுக்கடி said...

நீண்ட இடைவெளிக்குப் பின் வந்திருக்கிறீர்கள்!

அடிக்கடி எழுதுங்கள்.
செய்திகளைத் தெரியப்ப டுத்துங்கள்!