Kadhai Alla Nijam

Monday, November 11, 2013

பெயரில் என்ன இருக்கு,,,,,,,,,,,,
குறிப்பாக பெயர் வைப்பது என்பது தற்போது ஒரு பெரும் வேலையாகிவிட்டது பலருக்கு.பெயர் என்பது ஒருவருக்கான அடையாளங்களில் மிக முக்கியமானது.எங்கள் வீட்டின் அருகே நரிக்குரவர்கள் குடியிருப்பு இருக்கிறது.அவர்களின் வாழ்க்கை முறை முற்றிலும் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைக்கு முற்றிலும் வித்தியாசப்பட்டது.அவர்களின் பெயர்கள் வித்தியாசமானதாகவும் இருக்கும்.ஒருவருக்கு பெயர்  "லைட்டர்" லைட்டர் என்றால் என்ன? என்று கேட்டால் அவர் லைட் வெளிச்சத்தில் பிறந்தார் அதனால் லைட்டர் என்று வைத்தோம் என்கிறார்கள்.ஒருவருக்கு பெயர் "கிங்காங்"இது ஏதாவது குலதெய்வத்தின் பெயரா என்றால் இல்லை அந்த வழியே சென்றவர்கள் இவர் பிறந்திருக்கும் போது பேசிக்கொண்ட ஒரு வாத்தையாகுமாம்.மற்றொருவர் பெயர் "மாசி"இன்னொருவர் "தங்கவேல்"இது சினிமாவில் கேள்விப்பட்ட பெயராம் இப்படி அவர்களொரு அடையாளத்திற்க்காக பெயர்வைத்துக்கொள்ளுகிறார்கள் .இது சரியோ,தவறோ என்பது விவாதிக்க வேண்டியதுதான்.ஆனாலும் அவர்களை பொறுத்தவரை அழைப்பதற்க்குத்தான் பெயர் அது எப்படியிருந்தால் என்ன என்பது தான். அவர்களுக்கு சமுதாயத்திலே இந்த பெயர் எப்படி பார்க்கப்படுகிறது இதனால் இந்த பெயரை தாங்கி நிற்கிறவனக்கு என்ன விளைவு ஏற்படும் என்ற கவலையெல்லாம் இல்லை காரணம் அவர்கள் மனிதர்களாக இருந்தாலும் தற்போது இருக்கிற சூழலை பெரிதும் அவர்கள் உணரவே இல்லை. இருந்தாலும் தற்போது அவர்களின் அடுத்த தலைமுறை பள்ளிக்கூடங்களை நோக்கி செல்லத்துவங்கிவிட்டன.இப்போது பெயர்வைப்பதில் அவர்களும் கவனம் செலுத்தியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.அப்படி  பெயரில் என்னதான் இருக்கிறது!பெயர் ஒருவனுக்கு ரொம்ப முக்கியமா?தொடர்ந்து பார்ப்போம்--------------ஜோதி நரசிம்மன் 

No comments: