Kadhai Alla Nijam

Sunday, November 23, 2008

பூநகரி; நல்லூர் மோதலில் 43 படையினர் பலி; 70 பேர் காயம்; 8 உடலங்கள் மீட்பு

பூநகரி- பரந்தன் வீதி வழியாக இன்று கடும் மழைக்கு மத்தியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினரை நல்லூர் பகுதியில் தடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அகோர எதிர்த் தாக்குதலில் 43 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 70 படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மோதல் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் தொடங்கி கடும் மழை வெள்ளத்துக்கு மத்தியில் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் அகோர எதிர்த் தாக்குதலினால் சிறிலங்காப் படையினர் முன்நகர்வை கைவிட்டு பூநகரியை நோக்கி பழைய நிலைகளுக்குப் பின்வாங்கினர் எனவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலின் பின்னர் சிறிலங்காப் படையினரின் 8 உடலங்களையும் வெடிப்பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
உருத்திரபுரத்திற்கும் குஞ்சுப்பரந்தனுக்கும் இடையில் உள்ள உருத்திரபுரம் சிவன் கோயிலுக்கு அருகிலேயே படையினருக்கும் புலிகளுக்கும் மடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை படையினரின் தாக்குதல்களினால் பல இடங்களிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளையும் கைவிட்டு பெரும் இன்னல்களுக்கு மத்தியில் மழை வெள்ளத்தையும் பார்க்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
நல்லூர் பிரதேசம் பூநகரிக்கும் பரந்தனுக்கும் இடையில் குடமுருட்டி ஆறு யாழ். கடனீரேரியில் சங்கமிக்கும் பகுதியில் உள்ளது. அந்த ஆறு மழை வெள்ளத்தால் நிரம்பி பெருகியுள்ளது.
இதேவேளை நேற்று சனிக்கிழமையும் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையும் கிளிநொச்சி தெற்கே முறிகண்டி அறிவியல் நகர்ப் பகுதியில் இடமபெற்ற மோதலில் 35 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்

No comments: