Kadhai Alla Nijam

Sunday, November 2, 2008

வான்புலிகள் மீது இந்திய படையினரும் தாக்குதல்


வான்புலிகள் மீது இந்திய படையினரும் தாக்குதல்
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வான்பரப்பில் கடந்த செவ்வாய்கிழமை வான்புலிகள் பறப்பினை மேற்கொண்ட போது கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு படையினரும் வானூர்தியை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தாக்குதல் நடத்திவிட்டு கிளிநொச்சி நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்த வான்புலிகளின் வானூர்தியை நோக்கி இந்திய படையினர் சரமாரியான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்திய படையினரின் தொடர்ச்சியான இத்தாக்குதலினால் அருகில் உள்ள கட்டடங்கள் பெரும் ஆட்டம் கண்டுள்ளன.
இந்திய படையினாரின் தாக்குதலைத் தொடர்ந்து அச்சமடைந்த தான் கட்டிலின் கீழ் புகுந்து கொண்டதாக காலிமுகத்திடல் விடுதியில் தங்கியிருந்த விருந்தினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது போன்ற தாக்குதல் அச்சத்தினை தான் முன்னர் எப்போதும் கண்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் இடம்பெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும்படி தமிழ்நாடு இந்திய மத்திய அரசை கேட்டுவரும் இந்நிலையில் இந்திய படையினருக்கான தாக்குதல் உத்தரவை யார் வழங்கியது என சில வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
வவுனியாவில் வான்புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதலில் கதுவீ கருவிகளை இயக்கிவந்த இரு இந்திய அதிகாரிகள் காயமடைந்ததை தொடர்ந்து தமிழ் நாட்டு மக்கள் சினமடைந்த நிலையில் தற்போது இந்திய படையினர் நேரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: